எதிர்கட்சியினர் என்னை அவுரங்கசிப் என்று அழைக்கின்றனர்; என்னை தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளனர்; பிரதமர் மோடி!!

By Asianet Tamil  |  First Published Mar 21, 2024, 11:33 AM IST

நாடு தான் எனக்கு முக்கியம். உலகிலேயே இந்தியா தான் இளைய நாடு என்று பிரதமர் மோடி இன்று ஆங்கில செய்தி நிறுவனத்தின் மாநாட்டில் பேசிய உரையில் தெரிவித்தார். 
 


பிரதமர் மோடி ஆங்கில செய்தி நிறுவனமான சிஎன்என் - நியூஸ் 18-ன் ரைசிங் பாரத் மாநாட்டில் பேசினார். அப்போது ஒரே ஒரு விஷயம் எவ்வாறு 2014க்குப் பின்னர் அரசின் செயல்பாடுகளை மாற்றியது என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தனது உரையில், ''நியாத் என்றால் நோக்கம் என்று பொருள்படும். எந்த நோக்கம் என்று நீங்கள் கேட்கலாம். நாடு என்பதுதான் எனது முதல் நோக்கம். எனது நாட்டில் வளம் இல்லை, வளத்திற்கு பஞ்சம் என்று ஒருபோதும் கூற முடியாது. ஏழை நாடு கிடையாது. உலகிலேயே இளைய நாடு நம்முடையது தான். மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நமது நாடு பின் தங்கி இருக்கிறது என்று கூறுவதற்கு இல்லை. நாடு முதலில் என்ற நோக்கத்துடன் நாம் தொடர்ந்து முன்னேறி செல்ல வேண்டும்.

Tap to resize

Latest Videos

நமக்கு பலவற்றைக் இந்த நாடு கொடுக்கிறது. நாம் இங்கு வாழ்கிறோம். நாம் ஏதாவது நாட்டுக்காக வித்தியாசமாக செய்கிறோமா? இந்த வேறுபாடு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்கிறது. நீங்கள் எந்த தொழில் செய்பவர்களாக இருக்கட்டும். எந்த தொழில் செய்தாலும் உங்களது நாடு என்ற எண்ணம் உங்களது மனதில் வரவேண்டும். அந்த எண்ணம் நாட்டை முன்னோக்கி எடுத்து செல்வதாக இருக்க வேண்டும். இந்த விதையானது அரசு மற்றும் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் எழுச்சி பெறும் பாரதத்தின் அடித்தளமாக இருக்க வேண்டும்.

நமது எதிர்க்கட்சியினர் என்னை 104 முறை அவமதித்துள்ளனர். என்னை அவுரங்கசிப் என்று அழைக்கின்றனர். என்னை தீர்த்துக் கட்ட வேண்டும் என்று திட்டமிடுள்ளனர். இவர்களது அவமதிப்பு எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. என்னுடன் ஏழைகள் இருக்கின்றனர். அரசின் நலத்திட்டங்கள் அவர்களை சென்றடைய வேண்டும் என்று உத்தரவாதம் அளித்துள்ளேன். 

கடந்த பத்தாண்டுகளில் மக்களின் பல்வேறு நலத்திட்டங்களுக்காக ரூ. 34 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது. முந்தைய ஊழல் அரசாக இருந்து இருந்தால் இந்தப் பணம் எல்லாம் ஊழல்வாதிகளின் பாக்கெட்டுக்குள் சென்று இருக்கும்'' என்றார். 

click me!