Lok Sabha Election 2024: மோடி அரசின் 10 ஆண்டுகால சாதனைகள் என்னென்ன? 'மூட் ஆஃப் தி நேஷன்' சர்வே முடிவுகள்!!

By SG Balan  |  First Published Mar 27, 2024, 6:46 PM IST

மோடி ஆட்சியில் நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் நடுத்தர வர்க்கத்தின் நிலை மேம்பட்டிருக்கின்றது என்று சர்வேயில் பதில் அளித்த 47.8% பேர் கருதுகின்றனர்.


பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 10 ஆண்டு ஆட்சியில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அதிக அளவு வரவேற்பு இருப்பது ஏஷியாநெட் நியூஸ் நெட்வொர்க் மூட் ஆஃப் தி நேஷன் சர்வேயில் தெரியவந்துள்ளது.

மூட் ஆஃப் தி நேஷன் சர்வே (Mood of the Nation Survey) என்ற மெகா கருத்துக்கணிப்பை ஏஷியாநெட் நியூஸ் நெட்வொர்க் நடத்தியுள்ளது. இந்தக் கருத்துக்கணிப்பில் நரேந்திர மோடி அரசின் மிகப்பெரிய சாதனை எது என்று கேட்டபோது, 38.11 சதவீதம் பேர், உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளைக் குறிப்பிட்டுள்ளார். 26.41 சதவீதம் பேர் டிஜிட்டல் இந்தியா திட்டத்தைத் தேர்வு செய்துள்ளனர். 'ஆத்மநிர்பர் பாரத்' (சுயசார்பு இந்தியா) திட்டத்தை 11.46 சதவீதம் பேர் தேர்ந்தெடுத்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

இந்தி பேசும் மாநிலங்களில் இருந்து கருத்து கூறியவர்களில் 30.04 சதவீதம் பேர் ராமர் கோவில் கட்டும் வாக்குறுதியை நிறைவேற்றியதமுதான்மோடி அரசின் மிகப்பெரிய சாதனை என்கிறார்கள். தெலுங்கு பேசும் மக்களில் 30.83 சதவீதம் பேரும் இதே பார்வையைக் கொண்டுள்ளனர். அவர்கள் டிஜிட்டல் இந்தியா திட்டத்தையும் வரவேற்றுள்ளனர்.

2024 மக்களவை தேர்தலில் மோடி அலை வலுவான தாக்கம் செலுத்தும் என்பதும் இந்த சர்வே மூலம் உறுதியாகிறது. பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் உள்ளவர்கள்கூட 60.33 சதவீதம் பேர் இந்தியா கூட்டணியால் என்.டி.ஏ. கூட்டணியை வெல்ல முடியாது என்று கருதுகின்றனர்.

இலவசங்கள் தேவையா? மக்களின் மனது மாறுகிறதா? ஆச்சரியம் அளிக்கும் ஏசியாநெட் நியூஸ் கருத்துக் கணிப்பு முடிவுகள்!!

ஒட்டுமொத்தமாக கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 57.16 சதவீதம் பேர் அயோத்தி ராமர் கோயில் 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிவுகளில் முக்கிய காரணியாக இருக்கும் என்று கூறியுள்ளனர். 31.16 சதவீதம் பேர் இதற்கு மாறான கருத்தைத் பதிவு செய்துள்ளனர்.

மோடி ஆட்சியில் நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் நடுத்தர வர்க்கத்தின் நிலை மேம்பட்டிருக்கின்றது என்று சர்வேயில் பதில் அளித்த 47.8% பேர் கருதுகின்றனர். 46.1% பேர் நடுத்த மக்களின் நிலையில் முன்னேற்றம் இல்லை என நினைக்கிறார்கள்.

சர்வேயில் பதிலளித்த 51.07 சதவீதம் பேர் மோடி அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது என நம்புகிறார்கள். 42.97 சதவீதம் பேர் மோடி அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று குறை கூறியுள்ளனர். மோடி ஆட்சியில் ஊழல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று 60.4 சதவீதம் பேர் கருதுகின்றனர்.

மோடி அரசின் வெளியுறவுக் கொள்கையை 56.39 சதவீதம் பேர் பாராட்டியுள்ளனர். சீனாவுடனான எல்லைப் பிரச்சினையில் மோடி அரசின் செயல்பாடுகளை 65.08 சதவீதம் பேர் ஆதரிக்கிறார்கள். 79.27 சதவீதம் பேர் பிரதமர் மோடியின் ஆட்சியில் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது என்று நம்புகின்றனர்.

Mood of the Nation Survey 2024: ஏசியாநெட் நியூஸ் மூட் ஆஃப் த நேஷன் சர்வே முடிவுகள்! மக்கள் ஆதரவு யார் பக்கம்?

click me!