மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல்.! இன்று முதல் 4 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடப்படும்..!

Published : Apr 11, 2022, 02:46 PM IST
மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல்.!  இன்று முதல் 4 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடப்படும்..!

சுருக்கம்

இன்று முதல் 4 நாட்கள் மதுக்கடைகள் திறக்க தடை என்று மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சிகர தகவல் வெளியாகி உள்ளது.

பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல்பந்த் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், ‘  பெங்களூரு அல்சூரில் உள்ள கோதண்டராமர் கோவிலில் பல்லக்கு உற்சவத்தையொட்டி அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் ஏப்ரல் 11-ந் தேதி (இன்று), 12-ந் தேதி (நாளை) அல்சூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மதுக்கடைகளை திறக்கவும், மதுபானம் விற்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதுபோல முத்தியாலம்மன் கோவில் திருவிழாவையொட்டி கமர்சியல் தெரு, புலிகேசிநகர், சிவாஜிநகர், டி.ஜே.ஹள்ளி ஆகிய போலீஸ் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 13, 14-ந் தேதிகளில் மதுக்கடைகளை திறக்கவும், மதுபானம் விற்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : திராவிட இயக்கங்கள் மட்டும்தான் தமிழ்நாட்டை ஆளும்.! பாஜகவுக்கு ‘ஷாக்’ கொடுத்த செங்கோட்டையன் !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வாகன ஓட்டிகளுக்கு ஜாக்பாட்! நாளை முதல் சுங்க கட்டணம் அதிரடி குறைப்பு.. எந்தெந்த சாலைகள் தெரியுமா..?
இந்தியா ஒரு மத நாடாக மாறும்... இஸ்லாமியர்களுக்கு விசுவாச சான்றிதழ் தேவையில்லை.. ஓவைசி சரவெடி..!