பூரண மதுவிலக்கு: பீகாரில் அதிகரிக்கும் கள்ளச்சாராய மரணங்கள்!

By Manikanda Prabu  |  First Published Nov 19, 2023, 10:23 AM IST

பூரண மதுவிலக்கு அமலில் இருக்கும் பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராய மரணங்கள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


பீகார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்திய 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளது.

கள்ள சாராயம் குடித்து சீதாமரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 2 பேர் சிகிச்சை பெற்று வருவதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து நேற்று இரவு போலீசார் அங்கு சென்றுள்ளனர். இருப்பினும், அவர்கள் மருத்துவமனைக்கு வருவதற்குள், அவதேஷ் குமார் என அடையாளம் காணப்பட்ட ஒருவர் இறந்துவிட்டார் எனவும், இறப்புக்கான சரியான காரணம் பிரேத பரிசோதனைக்குப் பின்னரே தெரியவரும் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Latest Videos

undefined

மேலும், ரோஷன் ராய் என அடையாளம் காணப்பட்ட மற்றொரு நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது குடும்ப உறுப்பினர்களுடன் போலீசார் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், அப்பகுதியில் மேலும் 2 பேர் கள்ளச்சாராயம் குடித்து இறந்தது தெரிய வந்துள்ளது.

இந்த இருவரது இறப்பு குறித்து கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இருப்பினும், போலீசாருக்கு தெரிவிக்காமல் அவர்களது உடல்கள் தகனம் செய்யப்பட்டு விட்டதாகவும், இதுகுறித்து விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, கள்ளச்சாரயம் விற்பனை செய்த குற்றச்சாட்டில் இதுவரை மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து 90 மதுபாட்டில்கள் மீட்கப்பட்டதாகவும் போலீசார் தகவல் தெரிவித்தனர்.

3 நாட்களுக்கு ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்த முடியாது.! வெளியான அறிவிப்பு- ஏன் தெரியுமா.?

பீகார் மாநிலத்தில் மது விற்பனை மற்றும் நுகர்வுக்கு 2016ஆம் ஆண்டில் நிதிஷ்குமார் அரசாங்கம் தடை விதித்தது. இருப்பினும், சாராயக் கடத்தல், கள்ளச்சாராயம் தயாரித்து விற்பனை போன்ற சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன. இதற்கு எதிராக போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் இந்த சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் கள்ள சாராயம் குடித்து 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கோரி பலரும் போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், பீகார், குஜராத் போன்ற பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலங்களில் சாராயக் கடத்தல், கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழப்பு போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என்பது கவனிக்கத்தக்கது.

click me!