மின் கட்டணம் ஆன்லைனில் செலுத்தும் வசதியை மேம்படுத்தும் வகையில் வருகிற 24 ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்த முடியாது என கர்நாடக மாநில அரசு அறிவித்துள்ளது.
ஆன்லைனில் மின் கட்டணம்
மாறி வரும் நவீன யுகத்திற்கு ஏற்ப தொழில்நுட்ப வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. விரல் நுனியில் உலகத்தை கொண்டு வந்த இந்த கால கட்டத்தில் விமான, ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது. வங்கி கணக்கை பராமரிப்பது, மின் கட்டணம் செலுத்துவது என அனைத்தும் ஆன்லைனில் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக கூகுள் பே, பேடிஎம் என இணையதளத்தில் கட்டணம் செலுத்தும் முறையானது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மின் கட்டணம் செலுத்த வரிசையில் நீண்ட நேரம் நின்று காத்திருப்பதற்கு பதிலாக ஒரே நிமிடத்தில் மின் கட்டணம் செலுத்தும் திட்டத்தை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.
சர்வர் மாற்றம்- மின் கட்டணம் செலுத்துவதில் சிக்கல்
இந்தநிலையில் கர்நாடக மாநிலத்தில் தற்போது R-APDRP IT அப்ளிகேஷனில் தான் அனைத்து வாடிக்கையாளர்களின் விவரங்களும் இடம்பெற்றுள்ளன. இது மிகவும் பழமையான வழிமுறைகளை அடிப்படையாக கொண்டிருக்கிறது. இதனை மேம்படுத்த கர்நாடக மாநில மின்சாரத்துறை முக்கிய முடிவு எடுத்துள்ளது. அதன் படி ஹெச்.எஸ்.ஆர் லே அவுட்டில் உள்ள மின்சாரத்துறையின் மத்திய சர்வருக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக வருகிற வெள்ளிக்கிழமை முதல் ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துவதில் சிரமம் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற நவம்பர் 24,25,26 ஆகிய தேதிகளில் இந்த பணிகள் நடைபெற இருப்பதால் ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்த முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 நாட்களுக்கு பராமரிப்பு பணி
இதனால் மின்கட்டணங்களை செலுத்த முடியாமல் வாடிக்கையாளர்கள் சிரமங்களை சந்திக்க வேண்டி வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் முடிவடைந்து மின் வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம், மொபைல் ஆப், Third Party ஆப் ஆகியவற்றில் நவம்பர் 27ஆம் தேதியில் இருந்து இயல்பு நிலை திரும்பிவிடும். எனவே இந்த மூன்று நாட்களுக்கு முன்பாக அல்லது அதற்கு பின்பாக வாடிக்கையாளர்கள் ஆன்லைன் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கர்நாடக மின்சாரத்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்
Tasmac Shop : 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்... வெளியான அறிவிப்பு- என்ன காரணம் தெரியுமா.?