இது ஹலால் சான்றிதழ் இல்லாத நிறுவனங்களின் தயாரிப்புகளின் விற்பனையை குறைப்பதற்கான பெரிய சதித்திட்டம் என்றும் சட்டவிரோதமானது என்றும் உ.பி அரசு தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேச அரசு ஹலால் செய்யப்பட்ட பொருட்களுக்கு இன்று முதல் தடை விதித்துள்ளது. ஹலால் சான்றிதழுடன் கூடிய உணவுப் பொருட்களின் உற்பத்தி, சேமிப்பு, விநியோகம் மற்றும் விற்பனை செய்வதற்கு உடனடியாக தடை அமுலுக்கு வருகிறது என்று தெரிவித்துள்ளது. ஆனால், ஏற்றுமதிக்காக உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தத் தடை இல்லை என்றும் கூறியுள்ளது.
"உத்தரப்பிரதேசத்தில் ஹலால் சான்றளிக்கப்பட்ட மருந்துகள், மருத்துவ சாதனங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்களை உற்பத்தி செய்தல், சேமித்தல், விநியோகம் செய்தல், வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவற்றில் ஈடுபடும் எந்தவொரு தனிநபர் அல்லது நிறுவனத்திற்கும் எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும்" என்று உ.பி. அரசின் அதிகாரப்பூர்வ உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
ஹலால் சான்றிதழ் உணவுப் பொருட்களின் தரம் குறித்த குழப்பத்தை உருவாக்கும். உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டத்தின் 89வது பிரிவின் கீழ் இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. உணவுப் பொருட்களின் தரத்தை தீர்மானிக்கும் உரிமை, அந்தச் சட்டத்தின் 29வது பிரிவில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களுக்கு மட்டுமே உள்ளது. அவர்கள் சட்டத்தின் விதிகளின்படி தொடர்புடைய தரங்களைச் சரிபார்க்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
ஒருத்தருக்கு 11,230 ரூபாயா! சுவிதா எக்ஸ்பிரஸ் ரயில்களில் டிக்கெட்டுக்கு டைனமிக் கட்டண முறை மாறுமா?
மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம், 1940 மற்றும் அது தொடர்பான விதிகளில் ஹலால் சான்றிதழ் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், சில மருந்துகள், மருத்துவ சாதனங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் அவற்றின் பேக்கேஜிங் அல்லது லேபிளிங்கில் ஹலால் சான்றிதழ் இருக்கிறது என அரசு உத்தரவில் தெரிவிக்கப்படுகிறது.
பொருட்களின் விற்பனையை அதிகரிக்க, மக்களின் மத உணர்வுகளை பயன்படுத்தி "போலி" ஹலால் சான்றிதழ்களை பயன்படுத்துவதாக, ஒரு நிறுவனம் மற்றும் சில அமைப்புகளுக்கு எதிராக உ.பி. காவல்துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து உ.பி.யில் ஆளும் பாஜக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
ஹலால் இந்தியா பிரைவேட் லிமிடெட் சென்னை, ஜமியத் உலமா-இ-ஹிந்த் ஹலால் டிரஸ்ட் டெல்லி, ஹலால் கவுன்சில் ஆஃப் இந்தியா மும்பை, ஜமியத் உலமா மகாராஷ்டிரா மற்றும் பிற நிறுவனங்கள் விற்பனையை அதிகரிக்க ஹலால் சான்றிதழ் வழங்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது ஹலால் சான்றிதழ் இல்லாத நிறுவனங்களின் தயாரிப்புகளின் விற்பனையை குறைப்பதற்கான பெரிய சதித்திட்டம் என்றும் சட்டவிரோதமானது என்றும் உ.பி அரசு தெரிவித்துள்ளது.
ராமேஸ்வரத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள புதிய பாம்பன் பாலம்! விரைவில் திறப்பு விழா!