பொதுத்துறை காப்பிட்டு நிறுவனமான எல்ஐசியில் 9 ஆயிரத்துக்கு மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி (LIC) புதிய ஆள் சேர்ப்பு நடவடிக்கை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் 9394 ஏ.டி.ஓ. (ADO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெவ்வேறு மண்டல அலுவலகங்களில் பணியாற்றுவதற்கு தகுதியான நபர்கள் வேலையில் சேர்க்கப்பட உள்ளனர். விருப்பம் உள்ளவர்கள் இதற்கான விண்ணப்பங்களை வரும் பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
பணிக்குத் தேர்வாகும் நபர்கள் ரூ.51,500 மாத ஊதியத்துடன் ஓராண்டு பயிற்சிப் பணியில் இருப்பார்கள். ஓராண்டு முடிவில் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு பெறவும் வாய்ப்பு உண்டு.
இந்தப் பணிக்கான விண்ணப்பப் பதிவு நேற்று முதல் தொடங்கிவிட்டது. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்களுக்கான வயது வரம்பு 21 முதல் 30 வரை.
இந்தப் பணியிடங்களை நிரப்ப எல்ஐசி இரண்டு கட்டங்களாக தேர்வு நடத்துகிறது. இரண்டும் ஆன்லைனில் நடத்தப்படும். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வும் மருத்துவப் பரிசோதனையும் நடைபெறும். இவற்றிலும் தேர்ச்சி பெறுகிறவர்கள் பணியில் சேரலாம்.
எஸ்.சி. எஸ்.டி. பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.100. மற்ற பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.750.
மண்டல வாரியாக காலி பணியிடங்கள்:
விண்ணபிக்க விரும்புவோர் நினைவில் கொள்ளவேண்டிய முக்கிய தேதிகள்:
முதியவரை காரில் 8 கி.மீ. தரதரவென இழுத்துச் சென்று கொன்ற கொடூரம்
இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://ibpsonline.ibps.in/licadojan23/ என்ற வலைத்தளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம். அல்லது கீழே தரப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்தும் விண்ணப்பிக்க முடியும்.
எல்ஐசியின் இந்த வேலைவாய்ப்பு பற்றி கூடுதல் தகவல்களை அறிந்துகொள்ள பின்வரும் இணைப்பை கிளிக் செய்யவும்.