12ம் வகுப்பு மார்க் கம்மியா இருக்கு; உங்களுக்கு வீடு இல்ல; இணையத்தில் வைரலான வீட்டு ஓனரின் வாட்ஸ் அப் ச்சேட்!!

Published : Apr 28, 2023, 05:03 PM IST
12ம் வகுப்பு மார்க் கம்மியா இருக்கு; உங்களுக்கு வீடு இல்ல; இணையத்தில் வைரலான வீட்டு ஓனரின் வாட்ஸ் அப் ச்சேட்!!

சுருக்கம்

பெங்களூரில் வாடகைக்கு வீடு பார்த்துக்கொண்டிருக்கும் ஒருவரிடம் வீட்டு உரிமையாளர் பேசிய வாடஸ் அப் ச்சேட் இணையத்தில் வைரலாகியுள்ளது. 

பெங்களூரில் வாடகைக்கு வீடு பார்த்துக்கொண்டிருக்கும் ஒருவரிடம் வீட்டு உரிமையாளர் பேசிய வாடஸ் அப் ச்சேட் இணையத்தில் வைரலாகியுள்ளது. ஐடி நிறுவனங்கள் அதிகம் இருக்கும் பெங்களூரில் அனைத்து மாநில இளைஞர்களும் தங்கி பணியாற்றி வருகின்றனர். சிலர் பி.ஜி. அல்லது ஹாஸ்டெல்களில் தங்கி பணியாற்றி வருகின்றனர். மேலும் சிலர் வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். அந்த வகையில் வாடகைக்கு வீடு பார்த்துக்கொண்டிருந்த ஒருவரிடம் வீட்டி உரிமையாளர் பேசிய ச்சேட் இணையத்தில் வைரலாகியுள்ளது.

இதையும் படிங்க: எனது மகளால்தான் மருமகன் ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமரானார்; சுதா நாராயண மூர்த்தி பெருமிதம்!!

முன்னதாக யோகேஷ் என்பவர் வீடு வாடகைக்கு தேடி வந்த நிலையில் ஆன்லைன் வாயிலாக வீடு வாடகைக்கு இருப்பதை அறிந்து அவரை வாட்ஸ் அப் மூலம் தொடர்புக்கொண்டுள்ளார்.  அப்போது வீட்டின் உரிமையாளர், யோகேஸிடம் ஆதார், நிறுவனத்தில் வழங்கிய கடிதம், பான் கார்டு, 10 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் 150 முதல் 120 வரிகளுக்குள் சுயவிவர குறிப்பு எழுதி அனுப்புமாறு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சி இதழின் சிறப்பு பதிப்பு.. வெளியிட்ட ஆயுஷ் அமைச்சகம்.!!

வீட்டு உரிமையாளர் கேட்ட அனைத்தையும் கொடுத்த யோகேஸுக்கு வீட்டு உரிமையாளர் வீடு கொடுக்க மறுத்துள்ளார். இதுத்தொடர்பான வாட்ஸ் அப் சேட்டில், ஹாய் யோகேஷ், நான் உங்கள் ஆவணத்தையும் புரோபைலையும் பார்த்தேன். 12ம் வகுப்பில் 90% மதிப்பெண்கள் இருக்க வேண்டும். நீங்கள் 75% மதிப்பெண் பெற்றதால் உங்களுக்கு வீடு கிடையாது என்று தெரிவித்துள்ளது. இது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

PREV
click me!

Recommended Stories

வீர் சாவர்க்கர் பெயரில் சர்வதேச விருது.. ஏற்க மறுத்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்!
பிரதமர் மோடி இதயங்களை ஹேக் செய்பவர்! மக்களவையில் தாறுமாறாக புகழ்ந்த கங்கனா ரணாவத்!