narendra modi: modi birthday: ‘லட்சக்கணக்கான தாய்மார்கள் என்னை ஆசிர்வதித்தார்கள்’: பிரதமர் மோடி உருக்கம்

By Pothy RajFirst Published Sep 17, 2022, 2:49 PM IST
Highlights

லட்சக்கணக்கான தாய்களின் ஆசிகளைப் பெற்று மகிழ்ச்சி அடைகிறேன். பெண்கள் எனது வலிமைக்கு ஊக்கமளிக்கிறார்கள் என்று பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

லட்சக்கணக்கான தாய்களின் ஆசிகளைப் பெற்று மகிழ்ச்சி அடைகிறேன். பெண்கள் எனது வலிமைக்கு ஊக்கமளிக்கிறார்கள் என்று பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மத்தியப் பிரதேசத்துக்கு இன்று பிரதமர் மோடி தனது 72-வது பிறந்தநாளில் வந்துள்ளார். குவாலியர் அருகே இருக்கும் குனோ தேசிய பூங்காவில் நமீபியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 3 சீட்டா சிறுத்தைப் புலிகளை காட்டில் திறந்துவிட்டார்.

கேரளாவில் நிழற்குடை சர்ச்சை: மடியில் அமர்ந்து போராட்டம் நடத்திய மாணவர்கள்: மேயர் ஆர்யா உறுதி

அந்த நிகழ்ச்சிக்குப்பின், ஷியோபூரில் மகளிர் சுய உதவிக்குழுவின் மாநாடு நடந்தது. அதில் பிரதமர் மோடி, முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:

இன்று என்னுடைய பிறந்தநாளான இன்று நான் என் தாயிடம் ஆசி பெறச் சென்றிருப்பேன். இன்று, என்னால் போக இயலவில்லை. ஆனால், பழங்குடியின பகுதிகளில், கிராமங்களில் கடினமாக உழைக்கும் லட்சக்கணக்கான தாய்மார்கள் என்னை இன்று ஆசிர்வதிக்கிறார்கள்.

கடந்த நூற்றாண்டில் இருந்த இந்தியாவுக்கும், இந்த நூற்றாண்டில் இருக்கும் புதிய இந்தியாவுக்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. இதற்கு நம்முடைய பெண் சக்தி முன்னெடுத்து வந்ததுதான். புதிய இந்தியாவில் இன்று, பஞ்சாயத்து பவன் முதல் குடியரசுத் தலைவர் மாளிகை வரை பெண்களின் கொடி பறக்கிறது.

பொருளாதாரமும், சூழியலும் முரண்பட்ட துறைகள் அல்ல: பிரதமர் மோடி

கடந்த 8 ஆண்டுகளாக சுய உதவிக் குழுக்களுக்கு அங்கீகாரம் அளிக்க பல்வேறு வழிகளில் உதவி இருக்கிறோம். இன்று, நாட்டில் 8 கோடிக்கும் அதிகமான பெண்கள் இந்த பிரச்சாரத்தில் இணைந்துள்ளனர். இந்த பிரச்சாரத்தில் குறைந்தபட்சம் கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒரு சகோதரி வந்து இணைய வேண்டும் என்பதுதான்

கிராமப்புற பொருளாதாரத்தில் தொழில்முனைவோர்களை உருவாக்க அனைத்து சாத்தியமான அம்சங்களுக்காக அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது. ஒரு மாவட்டம் ஒரு பொருள்  என்ற வார்த்தையின் அடிப்படையில், உள்ளூரில் தயாராகும் பொருட்களை பெரிய சந்தைகளில் கிடைக்கச் செய்வதாகும். 

'சீட்டா'வின் சிறப்புகள் ! நமீபிய சீட்டா சிறுத்தைகளை கூண்டிலிருந்து திறந்தார் பிரதமர் மோடி

இந்த செப்டம்பர் மாதம்,ஊட்டச்சத்து மாதமாக நாட்டில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முயற்சியால், 2023ம் ஆண்டை சிறுதானிய ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

75 ஆண்டுளுக்குப்பின் நம் நாட்டுக்கு நமீபியாவில் இருந்து 8 சீட்டா சிறுத்தைப் புலிகள் வந்துள்ளன. அந்த சீட்டா சிறுத்தைகள் நமது விருந்தினர்கள். நாட்டில் உள்ள அனைவரும் அந்த சீட்டாக்களை வரவேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

click me!