Cheetah: pm modi birthday: பொருளாதாரமும், சூழியலும் முரண்பட்ட துறைகள் அல்ல: பிரதமர் மோடி

By Pothy Raj  |  First Published Sep 17, 2022, 12:31 PM IST

பொருளாதாரமும், சூழியலும் முரண்பட்ட துறைகள் அல்ல என்று 21ம் ஆண்டில் உலகிற்கு இந்தியா செய்தியை சொல்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.


பொருளாதாரமும், சூழியலும் முரண்பட்ட துறைகள் அல்ல என்று 21ம் ஆண்டில் உலகிற்கு இந்தியா செய்தியை சொல்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

நமீயாவிலிருந்து 3 ஆண், 5 பெண் சீட்டா சிறுத்தைகள் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டன. இந்த 8 சீட்டாக்களும் மத்தியப்பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய உயிரியல்  பூங்காவில் விடப்படஉள்ளன.

Tap to resize

Latest Videos

முதலில் தனிமைக்காலம் முடிந்த 2 சீட்டாக்களை மட்டும் பிரதமர் மோடி தனது பிறந்தநாளான இன்று கூண்டிலிருந்து திறந்துவிட்டார். 

 

Prime Minister Narendra Modi releases 8 wild cheetahs brought from Namibia, in the Kuno National Park. pic.twitter.com/DbP6cRMS5n

— All India Radio News (@airnewsalerts)

ஏறக்குறைய 75 ஆண்டுகளுக்குப்பின் இந்தியாவில் சீட்டா சிறுத்தைப் புலிகள் வந்துள்ளன. கடந்த 1952ம் ஆண்டோடு இந்தியாவிலிருந்து சீட்டா புலிகள் இனம் அழிந்துவிட்டது.அதை மீட்டெடுக்கும் முயற்சியாக சீட்டா சிறுத்தைகள் கொண்டு வரப்பட்டுள்ளன

இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் புலி, சிறுத்தை, சீட்டா எண்ணிக்கை!!

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

70 ஆண்டுகளுக்குப்பின் சீட்டா சிறுத்தைகள் நமது மண்ணுக்கு மீண்டும் வந்துள்ளன. நமிபியா அரசுக்கும், அனைத்து இந்தியர்களுக்கும் நான் இந்த நேரத்தில் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். நமிபியா அரசின் உதவி இல்லாமல் இது சாத்தியப்படாது.

பல பத்தாண்டுகளுக்கு முன், பழங்கால வாழியல் சூழல் சிதைந்தது.ஆனால், இன்று அந்த வாழியல் சூழலை நாம் மீண்டும் இணைத்துள்ளோம். இந்த சீட்டா சிறுத்தைகள் போல், இயற்கை விரும்பும் இந்தியாவின் மனசாட்சியாக, முழுவீச்சில் எழுவோம்.

கடந்த 1952ம் ஆண்டில் இந்தியாவிலிருந்து சீட்டா சிறுத்தைகள் அழிந்துவிட்டதாக துரதிர்ஷ்டமாக அறிவித்துவிட்டோம். ஆனால், பல பத்தாண்டுகளாக மீண்டும் சீட்டாக்களை இந்தியாவுக்கு கொண்டுவர எந்த அர்த்தமுள்ள நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்று நாம் ஆசாதி கா அம்ரித் மகோத்சவ் கொண்டாடுகிறோம்.

8 நமீபிய சீட்டா சிறுத்தைகள் ஹெலிகாப்டர் மூலம் குவாலியர் உயிரியல் பூங்கா வந்தன

இந்த தேசம், புதிய எழுச்சியுடன் சீட்டாவின் மறுமலர்ச்சியை தொடங்கியுள்ளது.
சர்வதேச விதிமுறைகள், வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, சீட்டாவுக்கு சிறந்த வாழிடம் உருவாக்க இந்தியா முயற்சிக்கும். எங்களின் முயற்சியை தோல்வி அடையவிடமாட்டோம்.

சீட்டாக்கள் நமது விருந்தினர்களாக வந்துள்ளன, குனோ தேசியபூங்கா குறித்து தெரியாது. அந்த பூங்காவை சீட்டாவின் சொந்தவீடாக மாற்ற வேண்டும்.அதற்கு சில மாதங்களாகும். 

சீட்டா சிறுத்தைகளை கூண்டிலிருந்து திறந்துவிட்டார் பிரதமர் மோடி: சீட்டாவின் சிறப்புகள் என்ன?

இந்தியாவுக்கு இயற்கை, சுற்றுச்சூழல், விலங்குகள், பறவைகள் ஆகியவற்றின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை மட்டுமல்ல. நமக்குக உணர்வும், ஆன்மீகமும் கூட. பொருளாதாரமும், சூழியலும் முரண்பட்ட துறைகள் அல்ல என்று 21ம் ஆண்டில் உலகிற்கு இந்தியா செய்தியை சொல்கிறது

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்

click me!