Cheetah: modi : 'சீட்டா'வின் சிறப்புகள் ! நமீபிய சீட்டா சிறுத்தைகளை கூண்டிலிருந்து திறந்தார் பிரதமர் மோடி

By Pothy RajFirst Published Sep 17, 2022, 11:50 AM IST
Highlights

நமீபியாவிலிருந்து 8 சீட்டா ரக சிறுத்தைப் புலிகள் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அதில் 3 சீட்டாக்களை மட்டும் இன்று பிரதமர் மோடி வனத்துக்குள் திறந்துவிட்டார்

நமீபியாவிலிருந்து 8 சீட்டாரக சிறுத்தைப் புலிகள் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அதில் 3 சீட்டாக்களை மட்டும் இன்று பிரதமர் மோடி வனத்துக்குள் திறந்துவிட்டார்

நமீயாவிலிருந்து 3 ஆண், 5 பெண்சீட்டா சிறுத்தைகள் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டன. இந்த 8 சீட்டாக்களும் மத்தியப்பிரதேசத்தில் உள்ள குன் தேசிய உயிரியல்  பூங்காவில் விடப்படஉள்ளன. முதலில் தனிமைக்காலம் முடிந்த 3 சீட்டாக்களை மட்டும் பிரதமர் மோடி தனது பிறந்தநாளான இன்று திறந்துவிட்டார் 

 

Prime Minister Narendra Modi releases 8 wild cheetahs brought from Namibia, in the Kuno National Park. pic.twitter.com/DbP6cRMS5n

— All India Radio News (@airnewsalerts)

சீட்டாக்கள் சிறுத்தைகள் குறித்து சில ஸ்வாரஸ்யமான உண்மைகளைத் தெரிந்து கொள்ளலாம். 

உலகின் அதிவேக மனிதர் உசேன் போல்ட் டாப் ஸ்பீட் 44.72கி.மீதான். ஆனால், சீட்டா சிறுத்தைகள் ஓடத் தொடங்கிய 3 வினாடிகளில் 100 மீட்டரை எட்டும். ஆனால், இந்த வேகம், வெறும் 30 வினாடிகள் மட்டுமே நீடிக்கும் அடுத்தடுத்து வேகம் குறைந்துவிடும்.

‘சீட்டா’ சிறுத்தைகளை அழைத்து வர சிறப்பு விமானம்! இந்தியாவிலிருந்து நமிபியா சென்றது

புரியவில்லையா ! வடிவேலு ஒருபடத்தில் சொல்வாரே, பில்டிங் ஸ்ட்ராங்கு! பேஸ்மட்டம் வீக்! என்பதைப்போல், சீட்டாவால் புறப்படும்போது அதி வேகத்தை எட்டினாலும் அதனால் தொடர்ந்து அந்த வேகத்தை பராமரிக்க முடியாது.

அதற்கு காரணம், சீட்டாவுக்கு அந்த வேகத்தை பராமரிக்கும் அளவுக்கு உடல்வலிமை(ஸ்டாமினா) இல்லை. ஆதலால், சீட்டா சிறுத்தை தனது இரையே விரட்டி ஓடத் தொடங்கினால் 30 வினாடிகளுக்குள் பிடித்துவிட்டால்தான் அந்த இரை அதற்கு சொந்தம்.

பிரதமர் மோடியின் வெற்றிப் பயணம் ! டீ கடை டூ டெல்லி கோட்டை வரை! ஸ்வாரஸ்ய பார்வை

இல்லாவிட்டால், படிப்படியாக வேகம் குறைந்து இரையை விட்டுவிடும். அதாவது தான் நினைத்த இரையை அடையக்கூடிய சதவீதம் என்பது சீட்டா சிறுத்தைகளுக்கு 40 முதல் 50 சதவீதம்தான். ஆனால் இதுவே சிறுத்தைப்புலிகள் சதவீதம் 80 முதல் 90 சதவீதமாகும். 

அதனால்தான் சீட்டா சிறுத்தைகள் குறிப்பிட்ட தொலைவு ஓடியவுடன் சற்று இளைப்பாரிவிடும். இதன்காரணமாகவே சீட்டாவின் பெரும்பாலான இரைகள் சிறுத்தைகள், கழுதைப்புலிகள், புலிகளுக்கு சொந்தமாகிவிடும் அல்லது திருடிச்சென்றுவிடும்.

சீட்டா சிறுத்தைகள் உடல் வலிமையும் பெரிதாக இல்லை. சில நேரங்களில் மிகப்பெரிய கழுகுகள், பருந்துகள் கூட சீட்டாவை விரட்டி, தாக்கினாலும் போராடக்கூடிய வலிமை இருக்காது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், சிறுத்தைப் புலி, புலியின் வலிமை சீட்டாவுக்கு இல்லை.

ஆனால் சீட்டா சிறுத்தை வேகமாக ஓடும் வகையில் அதன் உடல் இயல்பாகவே அமைந்துள்ளது. மிகப்பெரிய நுரையீரல், மூக்கு ஆகிவற்றால் அதிகமாக ஆக்சிஜனை எடுக்க முடியும், விரைவாக ரத்தத்தை இதயத்துக்கு பம்ப் செய்து உடலுக்கு தேவையான ஆக்சிஜனை கொண்டு செல்ல முடியும்.

எப்போதும் மக்கள் பற்றிய சிந்தனை.. மோடிக்கு மாற்றே இல்லை.. பிரதமருக்கு மாஸா வாழ்த்து சொன்ன அண்ணாமலை.

சீட்டாவின் உடல்வாகு ஒல்லியாக, வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டது. அதனால்தான் 3 வினாடிகளில் 100 மீட்டரை எட்ட முடிகிறது. சிறிய தலை இருப்பதால் ஓடும்போது காற்றின் எதிர்ப்பை கட்டுப்படுத்த முடிகிறது. ஒல்லியான நீண்ட கால்களால், வேகமாக ஓட முடிகிறது.

மற்ற விலங்ககுளைப் போல் சீட்டாவின் கால் பாதங்கள் இருக்காது. மிகவும் கடினமாக, சிறிதாக இருக்கும். சுருக்கமாகக் கூறினால் கார் டயர்  போன்று கடினமாக இருக்கும், இதனால்தான் வேகமாகவும், இரையைப் பிடிக்கும்போது திடீரென திரும்பவும் முடிகிறது.

சீட்டாவின் கண்கள் மிகவும் கூர்மையானவை. மிகத் தொலைவில் வரக்கூடிய இரையைக் கூட துல்லியமாகக் கண்டு வேட்டையாடத் தயாராகிவிடும். கண்களுக்கு அருகே இருக்கும் கறுப்பு கோடுகள், ஓடும்போது, சூரிய வெளிச்சம்,ஒளி ஆகியவற்றிலிருந்து கண்களை பாதுகாக்கிறது. ஒட்டுமொத்தமாக சீட்டாவின் கண்கள் ஒரு பைனாகுலர் போன்று தேவைக்கு ஏற்ப சுருங்கி, விரிந்து கொள்ளும் தன்மை கொண்டவை. 

இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் புலி, சிறுத்தை, சீட்டா எண்ணிக்கை!!

ஆண் சீட்டாக்கள் 2 முதல் 5 நாட்களுக்கு ஒருமுறை இரையை வேட்டையாகும் தன்மை கொண்டது. தண்ணீர் குடிப்பதும் ஒவ்வொரு 3 அல்லது 4 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீரை அதிகமாகக் குடிக்கும்.
சீட்டா சிறுத்தைகள் பெரும்பாலும் ஓய்விலேயேதான் இருக்கும், தூங்கிக்கொண்டுதான் இருக்கும். அதிலும் வெப்பம் அதிகரித்தால் அதன் இருப்பிடத்தைவிட்டு வெளியே வராது. 

8 நமிபிய சீட்டா சிறுத்தைகள் ஹெலிகாப்டர் மூலம் குவாலியர் உயிரியல் பூங்கா வந்தன

சிங்கம், புலி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை போன்று உருமல் சத்தம் ஏதும் சீட்டாவிடம் இருக்காது. தனக்கு ஆபத்து ஏதும் வந்தால் மட்டும்தான் ஒருவிதமான அலறல் ஒலி எழுப்பும். சீட்டாவின் கருவுற்றுகாலம் 93 நாட்களாகும். ஒருமுறை ஈன்றால், 6 குட்டிகள் வரை ஈனும். ஒரு சீட்டாவின் சராசரி ஆயுள்காலம் 10 முதல் 12 ஆண்டுகளாகும் வாழுமிடங்களைப் பொறுத்து 17 முதல் 20 ஆண்டுகள் வரைகூட உயிர்வாழும். 

click me!