ஐ.டி. பெண் ஊழியர் கொலை: ரூ. ஒரு கோடி இழப்பீடு வழங்குகிறது இன்போசிஸ்

Asianet News Tamil  
Published : Feb 01, 2017, 04:39 AM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
ஐ.டி. பெண் ஊழியர் கொலை: ரூ. ஒரு கோடி இழப்பீடு வழங்குகிறது இன்போசிஸ்

சுருக்கம்

ஐ.டி. பெண் ஊழியர் கொலை: ரூ. ஒரு கோடி இழப்பீடு வழங்குகிறது இன்போசிஸ்


கேரள ஐ.டி. பெண் ஊழியர் புனேயில் கொலை செய்யப்பட்டார். இவரின் குடும்பத்துக்கு ரூ. ஒரு கோடி இழப்பீடு தரவும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை அளிக்கவும் இன்போசிஸ் நிறுவனம் முன் வந்துள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர் ரஸிலா (வயது 23). கோவையில் பொறியியல் பட்டபடிப்பு படித்த ரஸிலா, புனேயில் தங்கி இன்போசிஸ் நிறுவனத்தில்  பணியாற்றி வந்தார்.

சென்னையில் 2 ஆண்டுகள் பணியாற்றிய ரஸிலா, புனே இன்போசிஸ் அலுவலகத்தில் 2 மாதத்துக்கு முன்பு தான் சேர்ந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஸிலாவை அங்கு பணியாற்றும் இரவு காப்பாளர் பாபென் சாகியா என்பவர் கழுத்தைநெறித்து கொலை செய்தார்.

இது தொடர்பாக கொலை செய்த காவலாளி சாகியாவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கொலை செய்யப்பட்ட ரஸிலாவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள இன்போசிஸ் நிறுவனம் அவரின் குடும்பத்துக்கு ரூ.ஒரு கோடி இழப்பீடு தர முன் வந்துள்ளது.

இது குறித்து இன்போசிஸ் மனிதவளத்துறையின் பிரதிநிதி சந்தோஷ்நாயக் விடுத்த அறிக்கையில், “ புனே இன்போசிஸ் ஊழியர் ரஸிலாவின் மறைவுக்கு நாங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்

 அவரின் இழப்பு அவரின் குடும்பத்தினருக்கு ஈடுகட்ட முடியாது.இருப்பினும், இன்போசிஸ் நிறுவனம் சார்பில் ரஸிலா குடும்பத்தினருக்கு ரூ. ஒரு கோடி இழப்பீடு தர உள்ளோம்.மேலும், அவரின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் அளிக்கப்படும்” எனத் தெரிவி்த்துள்ளார்.

புனேயில் இருந்து கொண்டு கோழிக்கோட்டுக்கு நேற்று இரவு விமானம் மூலம் கோழிக்கோட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு இன்று இறுதிச்சடங்கு செய்யப்பட உள்ளது.

PREV
click me!

Recommended Stories

விர்ர்ர்ரென உயரும் தங்கத்தின் விலை..! உலகளவில் தாறுமாறாக உயர இதுதான் காரணம்..! எப்போது குறையும் தெரியுமா..?
காவி உடையில் சிங்கம்..! மோடி- யோகியை ஆதரிப்பதால் என் சமூகம் ஒதுக்குகிறது..! தௌகீர் அகமது வேதனை..!