நாடாளுமன்றத்தில் தீ விபத்து: பட்ஜெட் ஆவணங்களுக்கு சேதமா?

Asianet News Tamil  
Published : Feb 01, 2017, 04:33 AM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
நாடாளுமன்றத்தில் தீ விபத்து: பட்ஜெட் ஆவணங்களுக்கு சேதமா?

சுருக்கம்

நாடாளுமன்றத்தில் தீ விபத்து: பட்ஜெட் ஆவணங்களுக்கு சேதமா?

நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக, நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

உடனடியாக 5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்துதீயை அணைத்தனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து டெல்லி தலைமை தீயணைப்பு அதிகாரி அடுல் கார்க் கூறுகையில், “ நாடாளுமன்றத்தில் உள்ள முதல் தளம் அறை எண் 50ல் யு.பி.எஸ். வைக்கப்பட்டு உள்ளன.

இந்த அறையில் இருந்து புகையும், தீப் பொறியும்வருவதாக இரவு 9.30 மணி அளவில் தகவல் கிடைத்தது. இதையடுத்து, 5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, 15 நிமிடங்களில் தீயைஅணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தவிட்டோம்.

இந்த விபத்தில் யாருக்கும் எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை. நாளை பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருப்பதால், சிறிது பரபரப்புடன் இருந்தோம்.

ஆவணங்கள் வைத்திருக்கும் அறையில் எந்தவிதமான விபத்தும் இல்லை சேதமும் இல்லை ” என்று தெரிவித்தார்.

 

 

 

PREV
click me!

Recommended Stories

விமான விபத்தில் சிக்கிய துணைமுதல்வர் அஜித் பவார் காலமானார்..!
மகாராஷ்டிரா துணைமுதல்வரின் விமானம் தீப்பற்றி விபத்து.. அஜித்பவாரின் நிலை..? தொண்டர்கள் கலக்கம்