காவு வாங்கும் நுழைவு தேர்வுகள்.. கோட்டாவில் 16 வயது மாணவி தற்கொலை.. எண்ணிக்கை 25ஆக உயர்வு..!

By vinoth kumar  |  First Published Sep 13, 2023, 12:05 PM IST

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரம் ஐ.ஐ.டி - ஜே.இ.இ நுழைவுத்தேர்வு, நீட் நுழைவுத்தேர்வு போன்ற போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கப்படும் இடங்களில் முக்கியமானது. 


கோட்டாவில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த ஜார்கண்டை சேர்ந்த 16 வயது மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரம் ஐ.ஐ.டி - ஜே.இ.இ நுழைவுத்தேர்வு, நீட் நுழைவுத்தேர்வு போன்ற போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கப்படும் இடங்களில் முக்கியமானது. இங்கு இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து சுமார் 3 லட்சம் மாணவர்கள் வந்து தனியார் கோச்சிங் மையங்களில் தங்கிப் படித்து வருகின்றனர். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- மாணவர்கள் தற்கொலையை தடுக்க சீலிங் ஃபேனில் நூதன சாதனம்: மாவட்ட நிர்வாகம் உத்தரவு!

இங்கு பயிற்சி பெற வரும் மாணவர்கள், மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிர்ச்சியையும் தொடர்கதையாகவும் இருந்து வருகிறது.  நடப்பாண்டில் மட்டும் இதுவரை நீட் தேர்வுக்கு படித்து வந்த 24 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதையும் படிங்க;-  தற்கொலையை தடுப்பது விட அதற்கான காரணங்கள் அகற்றுவதே சிறந்தது.. நீட்டை ரத்து செய்யுங்கள்! அன்புமணி

இந்நிலையில், கோட்டாவில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த 16 வயது மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது.

click me!