அயோத்தியில் ராமர் கோயிலுக்காக நிலங்களை வாங்கியபோது, ஆர்.எஸ்.எஸ். உடன் தொடர்புடையவர்களுக்கு ஆதாயம் அளிக்கும் வகையில் அதிக விலை கொடுத்து நிலங்கள் வாங்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. ஆனால், மத்திய அரசு குற்றச்சாட்டுகளை புறக்கணிக்கிறது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக இதுவரை மொத்தம் ரூ.5,500 கோடி நன்கொடை சேகரிக்கப்பட்டுள்ளதாக கோயில் கட்டும் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
2022-23 மத்திய பட்ஜெட்டில் பள்ளி மதிய உணவு திட்டத்திற்கு மத்திய அரசு பங்களிப்பாக (60 சதவீதம்) ஒதுக்கப்பட்ட தொகை ரூ.10,234 கோடி. ராமர் கோயில் கட்டுவதற்குக் கிடைத்திருக்கும் தொகை பள்ளி மதிய உணவுத் திட்டத்துக்கான மத்திய அரசின் ஒதுக்கீட்டில் பாதிக்குச் சமமானதாகும்.
சேகரிக்கப்பட்ட பணத்தில், ரூ.3,400 கோடி இந்த ஆண்டு ஜனவரி 15 முதல் பிப்ரவரி 27 வரை சிறப்பு நன்கொடை இயக்கத்தின் மூலம் கிடைத்தது என்று ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
"ராமர் கோவில் கட்டுவதற்கு மக்கள் முழு மனதுடன் நன்கொடை அளித்து வருகின்றனர். நன்கொடையாளர்களின் பக்தி மிகவும் ஆழமானது, தொற்றுநோய் முழு நாட்டையும் ஸ்தம்பிக்கச் செய்தபோதும் அவர்கள் தொடர்ந்து எங்கள் கணக்குகளுக்கு பணத்தை அனுப்பி இருக்கிறார்கள்" என்று அறக்கட்டளையின் அலுவலகத்தை நடத்தும் ஆர்எஸ்எஸ் உறுப்பினர் பிரகாஷ் குப்தா அயோத்தியில் கூறியுள்ளார்.
அயோத்தியில் யோகி ஆதித்யநாத் அரசு கட்டவிருக்கும் பிரம்மாண்ட மியூசியம்!!
Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயிலை ஜனவரி 22ஆம் தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!
“சரியான தொகை எவ்வளவு என்பது தணிக்கைக்குப் பிறகு தெரியவரும். அது விரைவில் நடைபெறும். ஆனால் இப்போதே ஓர் அற்புதமான கோவிலைக் கட்டுவதற்குப் போதுமான பணம் கிடைத்துள்ளது" என்றும் அவர் சொல்கிறார்.
கோயில் முழுக்க முழுக்க பொது நன்கொடையில் கட்டப்படுவதாக அறக்கட்டளை கூறுகிறது. இந்த கோவிலை கட்டுவதற்கு ரூ.1,100 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மீதமுள்ள நிதி யாத்ரீகர்களுக்கான தங்குமிடம், அருங்காட்சியகம் மற்றும் மாநாட்டு மண்டபம் போன்ற கூடுதல் உள்கட்டமைப்புகளுக்குச் செல்லும் என்று கூறப்பட்டுகிறது.
“எங்கள் அலுவலகத்தில் தினமும் ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரை ரொக்கமாகப் பெற்றுவருகிறோம். மக்கள் காசோலை மூலமாகவும் RTGS மற்றும் NEFT மூலமாகவும் நன்கொடை அளிக்கிறார்கள்” என்று குப்தா தெரிவிக்கிறார். "பக்தர்களின் வருகை ஒரு நாளைக்கு 5,000 முதல் 10,000 வரை அதிகரித்துள்ளது. ராமர், சீதா மற்றும் லட்சுமணர் சிலைகள் ஜனவரி 2024 க்குள் புதிய கோவிலின் கருவறைக்குக் கொண்டுவரப்படும்" எனவும் அவர் கூறுகிறார்.
கோயில் கட்டுமானத்திற்காக நன்கொடை அளிப்பதோடு மட்டுமல்லாமல், தற்காலிக கோயிலில் பூஜைகள் மற்றும் இதர செலவுகளுக்காக நடத்துவதற்காகவும் பக்தர்கள் ஒரு மாதத்திற்கு 40 லட்சம் முதல் 50 லட்சம் ரூபாய் வரை நன்கொடை வழங்குகிறார்கள்.
உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் 2020ஆம் ஆண்டில் ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளையை மத்திய அரசு உருவாக்கியது. அயோத்தியில் ராமர் கோயிலுக்காக நிலங்களை வாங்கியபோது, ஆர்.எஸ்.எஸ். உடன் தொடர்புடையவர்களுக்கு ஆதாயம் அளிக்கும் வகையில் அதிக விலை கொடுத்து நிலங்கள் வாங்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. ஆனால், மத்திய அரசு குற்றச்சாட்டுகளை புறக்கணிக்கிறது.