தலித் முதியவரின் தலையில் காலணி மூட்டையை வைத்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டத்தில் உள்ள துகாரைச் சேர்ந்தவர் தல்சந்த் சால்வி. தலித் பெரியவரான இவர், பாரம்பரிய பகவத் கீதை கதை சொல்லி. சமீபத்தில் நடைபெற்ற மத நிகழ்வில் கலந்து கொண்ட இவர், பகவத் கீதை கதையை விவரிக்கும் போது சில தவறான வரலாற்று உண்மைகளை விவரித்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், உள்ளூர் காப் பஞ்சாயத்துக்கு அழைக்கப்பட்ட அவரது தலையில் செருப்புகள் அடங்கிய மூட்டையை வைத்து ஊரார் முன்னிலையில் மன்னிப்பு கேட்கச் சொல்லியுள்ளனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், முதியவர் ஒருவர் தலையில் மூட்டையுடன் கைகளை கட்டிக்கொண்டு நிற்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
undefined
இதுகுறித்து, பார்சோலி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 7 பேரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
வேலூர் கோட்டையில் மிதந்த ஆண் சடலம்; பொதுமக்கள் அச்சம் - அதிகாரிகள் விசாரணை
முதியவரின் தலையில் காலணி மூட்டையை வைத்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ளதால், இதனை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துக் கொண்டு ஆளும் காங்கிரஸ் அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன.
குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு பாரதிய தலித் சாகித்ய அகாடமி புகார் மனு அளித்துள்ளது.