ராஜஸ்தானில் 26 விரல்களுடன் பிறந்த குழந்தையை, தேவியின் அவதாரம் என்று குடும்பத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தானின் பரத்பூரில் 26 விரல்களுடன் பெண் குழந்தை பிறந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினர் அவளை "தெய்வ அவதாரம்" என்று அழைத்தனர். ஒவ்வொரு கையிலும் ஏழு விரல்கள் மற்றும் ஒவ்வொரு காலிலும் ஆறு விரல்களுடன் அக்குழந்தை பிறந்துள்ளது. குழந்தை தோலகர் தேவியின் அவதாரமாக அவரது குடும்பத்தினரால் கருதப்படுகிறது.
இருப்பினும், இது ஒரு மரபணு கோளாறு என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 26 விரல்கள் இருப்பது இயல்பானது என்றாலும், இந்த நிலை மிகவும் அரிதானது என்றும் கூறியுள்ளனர். எனினும் இந்த கூடுதல் விரல்களால் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது என்று மருத்துவர் கூறினார்.
மருத்துவர் பி.எஸ் சோனி இதுகுறித்து பேசிய போது "26 விரல்கள் இருப்பதில் எந்தவிதமான பாதிப்பும் இல்லை ஆனால் இது ஒரு மரபணு கோளாறு. சிறுமி முற்றிலும் ஆரோக்கியமாக இருக்கிறார்" என்று தெரிவித்தார்.
நடுவானில் எமர்ஜென்ஸி கதவை முயன்ற பயணி.. டெல்லி - சென்னை விமானத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..
ஞாயிற்றுக்கிழமை இரவு பொது சமூக மருத்துவமனையில் சர்ஜு தேவி என்ற 25 வயது பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர் சோனி தீபக் தெரிவித்தார். இந்தக் குழந்தையின் வருகையால் லட்சுமி எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டார் என்று குழந்தையின் மாமா மகிழ்ச்சி தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய அவர் “ குழந்தை பிறந்ததில் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர், மேலும் அவரை தோலகர் தேவியின் அவதாரமாக கருதுகின்றனர். என் சகோதரிக்கு 26 விரல்கள் கொண்ட குழந்தை பிறந்துள்ளது, அதை தோளகர் தேவியின் அவதாரமாக கருதுகிறோம், நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம்" என்று தெரிவித்தார்.. குழந்தையின் தந்தை கோபால் பட்டாச்சார்யா, மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) தலைமைக் காவலராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.