பஞ்சாபி பாடகர் கொலை வழக்கில் தப்பிய பிரபல ரவுடி..ஆம் ஆத்மியை விளாசிய பாஜக !

By Raghupati RFirst Published Oct 2, 2022, 3:40 PM IST
Highlights

சித்து முசேவாலா கொலைக் குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் காவலில் இருந்து தலைமறைவானது குறித்து பாஜக ஆம் ஆத்மி மீது கடுமையாக குற்றஞ்சாட்டி உள்ளது.

பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபக் என்ற பிரபல ரவுடி போலீஸ் காவலில் இருந்து தப்பினார். மத்திய புலனாய்வு ஏஜென்சியின் (சிஐஏ) ஊழியர் ஒருவர் அவரை இரவு 11 மணியளவில் கபுர்தலா சிறையில் இருந்து மான்சாவுக்கு தனது தனியார் வாகனத்தில் அழைத்துச் சென்று கொண்டிருந்தபோது தப்பியுள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக பஞ்சாபில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி கட்சியை பாஜக கடுமையாக குற்றம் சாட்டிவருகிறது. ஆம் ஆத்மி அரசு கிரிமினல் கும்பலுக்கு உதவுவதாக பாஜக செய்தித் தொடர்பாளர் ஷாஜத் பூனவல்லா குற்றம் சாட்டியுள்ளார். பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் கான்வாய்க்கு 42 கார்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் ட்வீட் செய்துள்ளார். ஆம் ஆத்மியின் விவிஐபி தலைவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..‘60 % கமிஷன் வந்தே ஆகணும் !’ ஊராட்சி தலைவர்களிடம் கமிஷன் கேட்ட ஆம்பூர் திமுக MLA - வைரல் வீடியோ

ஆனால் குண்டர் கும்பல் லாரன்ஸ் பிஷ்னோயின் நெருங்கிய உதவியாளரான தீபக்கைப் பாதுகாக்க போதுமான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. இதன் காரணமாக, சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் முக்கிய பங்கு வகித்த தீபக், பஞ்சாப் போலீஸ் பிடியில் இருந்து தப்பினார். கிரிமினல் கும்பல்களை ஒடுக்குவதற்கு பதிலாக, ஆம் ஆத்மி அரசு அவர்களுக்கு உதவுகிறது. தீபக் ஒரு கொடிய குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது. நான்காவது முறையாக போலீசாரை ஏமாற்றி தப்பியோடியுள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க..கேரளா மூத்த சிபிஎம் தலைவர் மறைவு - யார் இந்த கொடியேரி பாலகிருஷ்ணன் ?

42 car convoy for Proxy CM Bhagwant Mann, protection for VVIP netas of AAP but Bishnoi gang aide Deepak Tinu - who had major role on Moosewala murder ESCAPES FROM PUNJAB POLICE CUSTODY!

AAP is not ensuring crackdown on Gangs but helping them! Do we need more proof? pic.twitter.com/smeV1HgEZr

— Shehzad Jai Hind (@Shehzad_Ind)

தீபக் சித்து, முசேவாலா கொலைக்கு மூளையாக செயல்பட்ட கேங்க்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோயின் நெருங்கிய கூட்டாளி ஆவார். குற்றப்பத்திரிகையில் அவரது பெயர் உள்ளது. புரொடக்ஷன் வாரண்டின் பேரில் டெல்லி போலீசார் அவரை பஞ்சாப் அழைத்து வந்தனர். முன்னதாக, தீபக் 2017-ம் ஆண்டு போலீஸாரை ஏமாற்றி ஓடிவிட்டார். அவர் அம்பாலா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட அவர், போலீஸ் அதிகாரி ஒருவரின் கண்களில் மிளகுத் தூவிவிட்டு தப்பிச் சென்றார். தீபக்கை போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க..ராஜராஜ சோழன் இந்துவா.? அந்த தற்குறி சொல்லட்டும்.! இயக்குனர் வெற்றிமாறனை எச்சரித்த எச்.ராஜா.!

click me!