மகாத்மா காந்தி 154வது பிறந்தநாள்.. குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை..

Published : Oct 02, 2022, 10:43 AM IST
மகாத்மா காந்தி 154வது பிறந்தநாள்.. குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை..

சுருக்கம்

டெல்லியிலுள்ள காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.  

மகாத்மா காந்தியின் 154 வது பிறந்தநாள் இன்று கொண்டாப்படுகிறது. அந்த வகையில் டெல்லியிலுள்ள ராஜ்காட்டியில் அமைந்துள்ள காந்தி நினைவிடத்தில் இன்று பிரதமர் நரேந்திர மோடி, துணை குடியரசு தலைவர் ஜகதீப் தன்கர் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

அவர்களை தொடர்ந்து குடியரசு தலைவர் திரளபதி முர்மு காந்தி நினைவிடத்திற்கு வருகை புரிந்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

அதே போன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மல்லிகார்ஜூன் கார்கே உள்ளிடோர் காந்தி நினைவிடத்திற்கு வருகை புரிந்தனர். அவர்கள் காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நாளை பெங்களூரில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை! வெளியான லிஸ்ட்!
மோடிக்கு ஏன் தலைமை நீதிபதியை பிடிக்கவில்லை.. மக்களவையில் ராகுல் காந்தி சரமாரி கேள்வி!