கோழிக்கோடு - கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளுக்கு தீவைத்து எரித்த குற்றச்சாட்டில் சந்தேகிக்கப்பட்ட நபர் மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரியில் கைது செய்யப்பட்டார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கோழிக்கோடு - கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி நெருப்பை வீசிவிட்டு மர்ம நபர் ஒருவர் தப்பிச் சென்றார். இந்த சம்பவத்தில் பெண், குழந்தை உள்பட மூவர் கருகி இறந்தனர். இந்த நிலையில், தப்பிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வந்தனர். மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்புப் படையினர் மற்றும் மத்திய புலனாய்வுப் பிரிவினர் தேடி வந்தனர். இந்த நிலையில், ரத்னகிரியில் சந்தேகிக்கும் வகையில் இருந்த நபரை போலீசார் கைது செய்தனர். கேரளா போலீசாரும் தற்போது அந்த நபரை கைது செய்ய மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளனர். விரைவில் குற்றம்சாட்டப்பட்டவர் போலீசாரிடம் ஒப்படைக்கப்படுவார் என்று தீவிரவாத தடுப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரின் பெயர் ஷாருக்கான் சைஃபி என்பது தெரிய வந்துள்ளது. முகம் மற்றும் உடலில் காயங்களுடன் ஷாருக்கான் சைஃபி கைது செய்யப்பட்டு இருக்கிறார். கேரள அரசும் குற்றவாளியை கைது செய்ய 18 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு படையை அமைத்து தேடுதல் வேட்டையில் இறங்கி இருந்தது.
சம்பவம் நடந்த பின்னர் தண்டவாளத்தில் கிடந்த புத்தக்கத்தில் எழுதப்பட்டு இருந்த வாசகங்கள் மற்றும் பறிமுறல் செய்யப்பட்ட பை, ஆடைகள், கண்ணாடி ஆகியவற்றின் மூலம் குற்றவாளியை எளிதில் பிடிக்க போலீசார் மற்றும் புலனாய்வு ஏஜென்சிகளுக்கு உதவியது.
கர்நாடகாவில் குவிந்த அமலாக்கத்துறை அதிகாரிகள்? காங்கிரஸ் தலைவர்களில் வீடுகளில் ரெய்டா?