Karnataka Assembly Elections 2023: கர்நாடகாவில் பணத்தை வாரி இறைக்கும் கட்சிகள்! 6 நாளில் ரூ.48 கோடி பறிமுதல்!

By Dhanalakshmi G  |  First Published Apr 5, 2023, 10:18 AM IST

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு வெளியான 6 நாட்களில் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட ரூ. 47.43 கோடி ரொக்கம், பொருட்கள் மற்றும் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் தேதி அறிவித்து, தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததில் இருந்து கடந்த ஆறு நாட்களில் மட்டும் ரூ. 47.43 கோடி அளவிற்கு ரொக்கம், பொருட்கள் மற்றும் மதுபானங்களை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்து இருக்கின்றனர்.

கர்நாடகா மாநிலத்தில் வரும் மே 10ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. 13 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மும்முனைப் போட்டியில் இறங்கியுள்ளன. இந்த நிலையில் கடந்த மார்ச் 29ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.

Tap to resize

Latest Videos

Panguni Uthiram 2023: இன்று பங்குனி உத்திரம்! பக்தர்கள் கூட்டம் அலைமோதும் திருக்கோயில்கள்

ஒரு பக்கம் இன்னும் தீவிர பிரச்சாரங்களில் தலைவர்கள் இறங்கவில்லை என்றாலும், வாக்காளர்களைக் கவருவதற்காக பணம், பொருட்கள், மதுபானங்கள் கொடுப்பது சகஜமாக நடந்து வருகிறது. இதையடுத்து தேர்தல் அதிகாரிகள் கடுமையான சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, கடந்த ஆறு நாட்களில் மட்டும் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் வழங்கிய ரூ. 47.43 கோடி அளவிலான ரொக்கம், பொருட்கள் மற்றும் மதுபானங்களை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இதுகுறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி கூறுகையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட பொருட்கள் மற்றும் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தேர்தல் அறிவிப்புக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன்பு சுமார் 58 கோடி ரூபாய் அளவிலான பொருட்கள், ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. 172 வழக்குகள் பதியப்பட்டு இருந்தன. அப்போது, ரூ. 16.2  கோடி மதிப்பிலான பரிசுப் பொருட்களும், ரூ. 6.72 கோடி மதிப்பிலான தங்கம். ரூ. 63.98 லட்சம் மதிப்பிலான வெள்ளி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு இருந்தன. இவை தவிர ரூ. 41.26 கோடி மதிப்பிலான மருந்துகள், ரூ. 16 கோடி மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தன.

பெங்களூருவில் கனமழை: சென்னைக்கு திருப்பி வைக்கப்பட்ட 14 விமானங்கள்

click me!