கேரளாவை உலுக்கி எடுக்கும் கனமழை…. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை…..

By manimegalai aFirst Published Oct 30, 2021, 8:24 AM IST
Highlights

கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை தேசிய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

திருவனந்தபுரம்: கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை தேசிய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

தென்மாநிலங்களை பொறுத்தவரை அதிக மழைபொழிவை பெறும் மாநிலங்களில் கேரளாவும் ஒன்று. கடந்த பல வாரங்களாக அம்மாநிலத்தின் பல பகுதிகளில் மழை கொட்டி வருகிறது.

இடுக்கி, கொல்லம், பத்தினம்திட்டா என பல மாவட்டங்களில் மழை பெய்து தள்ளியது. வீடுகள், கட்டிடங்கள் என பலநீரில் மூழ்கின. தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

இடைவிடாது கொட்டி வரும் மழை எதிரொலியாக பல பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டது. தொடர்ந்து மழை கொட்டிக் கொண்டே இருப்பதால் நீர் நிலைகள்  வேகமாக நிரம்பிவிட்டன.

ஆறுகளில் வெள்ளம் அதிகரித்துள்ளதால் தாழ்வான பகுதிகளிலும் வசிக்கும் மக்களும், கரையோர பகுதிகளிலும் வசிக்கும் மக்களும் பாதுகாப்பான இடங்களுக்ககு இடம் பெயருமாறு அறிவிக்கப்பட்டு விட்டது. அவர்களுக்கு தேவையான உதவிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந் நிலையில், கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை தேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ளது. அதன்படி திருவனந்தபுரம், கொல்லம் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இதே போல பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இந்த 5 மாவட்டங்களிலும் பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆகவே மக்கள் நடமாடவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, திருச்சூர், வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. மேற்கண்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் தேசிய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

மழை அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளதால் பேரிடர் மீட்பு குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆறுகள், ஏரிகள் போன்ற நீர்நிலைகளுக்கு அருகில் சென்று வேடிக்கை பார்க்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே, கொல்லம் மாவட்டத்தில் நேற்றிரவு முழுவதும் பலத்த மழை கொட்டி இருக்கிறது. இடைவிடாத இந்த மழை காரணமாக புனலூர், தென்மலை பகுதியில் பல வீடுகளுக்கு மழைநீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இடைவிடாது கொட்டி தீர்க்கும் கனமழையால் சாலைகள் சேதம் அடைந்துள்ளன. ஆங்காங்கே போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

click me!