
கோட்டயத்தில் உள்ள காந்தி நகர் நர்சிங் பள்ளியில் கடுமையான ராகிங் சம்பவத்தில் ஈடுபட்டதற்காக ஐந்து மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ராகிங் எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் நடத்தப்பட்ட உள்கட்ட விசாரணைக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தகவல்களின்படி, மூன்றாமாண்டு மாணவர்கள், முதலாமாண்டு மாணவர்களை மூன்று மாதங்களாக கடுமையான ராகிங்கிற்கு உட்படுத்தினர். விசாரணைக்குப் பிறகு கல்லூரி முதல்வர் நடவடிக்கை எடுத்தார். மூத்த மாணவர்கள் பாதிக்கப்பட்டவர்களை ஆடைகளை கழற்றும்படி கட்டாயப்படுத்தி அவர்களை வீடியோ எடுத்துள்ளனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் காம்பஸ் கொண்டு காயங்களை ஏற்படுத்தி பின்னர் காயங்களுக்கு பாடி லோஷன் தடவி உள்ளனர்.
சென்னையில் அதிர்ச்சி! காதலியின் தாயை கொலை செய்த காதலன்! என்ன காரணம்? வெளியான தகவல்!
உடல் ரீதியாக துன்புறுத்தியதுடன் குற்றவாளிகள் முதலாமாண்டு மாணவர்களிடமிருந்து, மது வாங்குவதற்காக, தொடர்ந்து பணம் பறித்ததாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் அதிகாரிகளிடம் அளித்த புகாரில் இந்தக கொடுமை குறித்து விரிவான தகவல்களை அளித்துள்ளனர்.
இடைநீக்கத்துடன், ஐந்து குற்றவாளி மாணவர்களையும் போலீசார் காவலில் எடுத்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் கோட்டயத்தைச் சேர்ந்த சாமுவேல், வயநாட்டைச் சேர்ந்த ஜீவ், மலப்புரம் மஞ்சேரியைச் சேர்ந்த ரிஜில் ஜித், மலப்புரம் வந்தூரைச் சேர்ந்த ராகுல் ராஜ் மற்றும் கோட்டயம் கொருதோடைச் சேர்ந்த விவேக் ஆகியோர் அடங்குவர்.
பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் பிறப்புறுப்புகளில் டம்பல்ஸைத் தொங்கவிடக் கட்டாயப்படுத்தப்பட்டதும், காம்பஸ் போன்ற கூர்மையான கருவியால் காயப்படுத்தப்பட்டது உட்பட, கடுமையான உடல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளானதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. புகாரைத் தொடர்ந்து, போலீசார் இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
திருச்சியில் பட்டியலின மாணவருக்கு குளிர்பானத்தில் சிறுநீர் கலந்து கொடுத்த சக கல்லூரி மாணவர்கள்