கணவரை ஏமாற்றி கள்ளக் காதலனுடன் ஓடிய இளம் பெண் !! கழுத்தில் கத்தியுடன் வாட்ஸ்அப்பில் போட்டோ அனுப்பி நாடகம் ஆடியது அம்பலம்….

Published : Sep 07, 2018, 10:07 PM ISTUpdated : Sep 09, 2018, 07:27 PM IST
கணவரை ஏமாற்றி கள்ளக் காதலனுடன் ஓடிய இளம் பெண் !!  கழுத்தில் கத்தியுடன் வாட்ஸ்அப்பில் போட்டோ அனுப்பி நாடகம் ஆடியது அம்பலம்….

சுருக்கம்

கேரளாவில் தனது காதல் கணவரை ஏமாற்றிவிட்டு  கள்ளக் காதலனுடன் ஓடிய  இளம்பெண் கடத்தல் நாடகம் ஆடியது அம்பலமாகியுள்ளது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்தவர் மனு  மெக்கானிக். இவருக்கும் கோட்டயத்தை சேர்ந்த மீனு என்ற பெண்ணுக்கும்  இடையே காதல் ஏற்பட்டது. முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு . 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில்  மனு வேலைக்கு சென்று விட்டார். சிறிது நேரத்தில் மனைவி செல்போனில் மனுவை அழைத்தார். அப்போது அவர்  தன்னையும், மகனையும் ஒரு கும்பல் கடத்த வீட்டுக்குள் புகுந்து கழுத்தில் கத்தியை வைத்து அறுப்பதாக கூறி முடிக்கும் முன்பே இணைப்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் கழுத்து அறுக்கப்பட்டது போன்ற போட்டோ அவரின் வாட்ஸ் அப்புக்கு வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த மனு போலீசாருடன் வீட்டுக்கு சென்றார். அப்போது வீடு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது ரத்தக்கறை ஆங்காங்கே சிதறி கிடந்தது. போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது ரத்தம் குறித்து சந்தேகம் ஏற்பட்டது.

அதில் தண்ணீர் ஊற்றி பார்த்தபோது அது ரத்தம் இல்லை. குங்குமம் என்று தெரிந்தது. இதனால் மீனுவின் மீது போலீசாரின் சந்தேகப் பார்வை திரும்பியது. மீனுவின் செல்போன் எண்ணை வைத்து சைபர் கிரைம் போலீசாருடன் அவரை பிடிக்க திட்டமிட்டனர். இந்நிலையில் அவர் கோழிக்கோடு ரெயில் நிலையத்தில் இருப்பதாக தெரியவந்தது.

அங்கு சென்ற போலீசார் மீனு, அவரது மகன் மற்றும் அவருடன் இருந்த வாலிபர் ராஜிவ்  என்ற வாலிபரையும் பிடித்தனர். 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பல இண்ட்ரஸ்டிங் தகவல்கள் வெளியானது. காதல் திருமணம் செய்து குடும்பம் நடத்திய மீனுவுக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜிவ்  என்ற வாலிபருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் வீட்டை விட்டு ஓடிப்போக திட்டமிட்டனர்.

அதற்கான சமயம் எதிர்பார்த்த நிலையில் ஒரு கும்பல் கடத்தியதாக நாடகமாடலாம் என்று அவர்கள் திட்டம் தீட்டினார்.  நேற்று முன்தினம்  கணவருக்கு போன் செய்து கும்பல் கழுத்தை அறுத்து கடத்தி விட்டதாக கூறிவிட்டு மகனுடன் கள்ளக்காதலன் ராஜிவுடன்  காரில் தப்பிச்சென்றது தெரியவந்தது.

போலீசார் வழக்குப்பதிவு செய்து மீனு மற்றும் கள்ளக்காதலன் ராஜிவ்  ஆகியோரை கைது செய்தனர்.

PREV
click me!

Recommended Stories

ஆபரேஷன் சிந்தூரை தடுக்க பாகிஸ்தானுக்கு அல்லாஹ் வந்து உதவினார்..! இந்தியாவை பலவீனமாகக் காட்டும் அசீம் முனீர்..!
மகாராஸ்டிரா உள்ளாட்சி தேர்தலிலும் அடித்து தூக்கிய பாஜக..! உத்தவ், சரத் பவார் மொத்தமா காலி