பாஜக எம்எல்ஏ நாக்கை வெட்டுபவருக்கு ரூ.5 லட்சம்... முன்னாள் அமைச்சரின் பேச்சால் சர்ச்சை!

Published : Sep 07, 2018, 11:00 AM ISTUpdated : Sep 09, 2018, 08:13 PM IST
பாஜக எம்எல்ஏ நாக்கை வெட்டுபவருக்கு ரூ.5 லட்சம்... முன்னாள் அமைச்சரின் பேச்சால் சர்ச்சை!

சுருக்கம்

கடந்த 2 நாட்களுக்குமுன், கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. அதில் கலந்து கொண்ட மகாராஷ்டிர பாஜக எம்எல்ஏ.,வான ராம் கதம், காதலிக்கும் பெண் அதனை ஏற்றாலும், ஏற்காவிட்டாலும் அப்பெண்ணை கடத்தி வந்து திருமணம் செய்து வைக்கிறேன் என கூறினார்.

கடந்த 2 நாட்களுக்குமுன், கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. அதில் கலந்து கொண்ட மகாராஷ்டிர பாஜக எம்எல்ஏ.,வான ராம் கதம், காதலிக்கும் பெண் அதனை ஏற்றாலும், ஏற்காவிட்டாலும் அப்பெண்ணை கடத்தி வந்து திருமணம் செய்து வைக்கிறேன் என கூறினார். இதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினர் மத்தியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கு மன்னிப்பு கேட்பதாக கூறி அவர் ஒரு வீடியோவை வெளியிட்டார்.

 

ஆனாலும், பாஜக எம்எல்ஏ ராம் கதமிற்கு எதிராக மகளிர் அமைப்புக்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. ராம் கதம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக தலைமையை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சுபத் சவ்ஜி, பாஜக எம்எல்ஏ ராம் கதமின் நாக்கை வெட்டுவோருக்கு நான் ரூ.5 லட்சம் பரிசு வழங்குவேன். பெண்களை கடத்துவேன் என அவர் சொன்ன கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், ராம் கதமின் சர்ச்கையான பேச்சுக்காக முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் மகாராஷ்டிர மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

PREV
click me!

Recommended Stories

வங்கதேசத்தின் பாதுகாப்புக்கும், செழிப்புக்கும் இந்தியாவுக்கு நன்றியோடு இருங்கள்..! யூனுஷுக்கு ஷேக் ஹசீனா எச்சரிக்கை.!
ஆபரேஷன் சிந்தூரை தடுக்க பாகிஸ்தானுக்கு அல்லாஹ் வந்து உதவினார்..! இந்தியாவை பலவீனமாகக் காட்டும் அசீம் முனீர்..!