அழகான பெண் என போட்டோவை காட்டி கல்யாணம் செய்துடாங்க....ஏமாந்த மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை..!

Published : Sep 06, 2018, 06:03 PM ISTUpdated : Sep 09, 2018, 07:51 PM IST
அழகான பெண் என போட்டோவை காட்டி கல்யாணம் செய்துடாங்க....ஏமாந்த மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை..!

சுருக்கம்

தான் மனம் முடித்த மனைவி அழகாக இல்லை என்பதால் மனமுடைந்த புதுமண மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தான் மனம் முடித்த மனைவி அழகாக இல்லை என்பதால் மனமுடைந்த புதுமண மாப்பிள்ளை தூக்கிட்டு  தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
  
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டிணத்தில், அரசு வேலை செய்து வந்தவர் உள்ளவர் ஷேக் மைதீன். இவருக்கும் அங்குள்ள சூலுரு பகுதியில் குடியிருக்கும் முபீனா என்பவருக்கும் கடந்த 2 ஆம் வெகு சிறப்பாக நடைப்பெற்றது. திருமணம் முடிந்த அதே நாளில் மணமகன் மிகுந்த வருத்ததுடன் இருந்துள்ளார். பின்னர் அவருடைய தாய், காரணத்தை கேட்க, அப்போது தமது மனைவி அழகாக இல்லை எனவும், திருமணத்திற்கு முன்னர் அவர்கள் அளித்த புகைப்படம் வேறு மாதிரி இருந்தது என்றும் தெரிவித்து உள்ளார். 

பின்னர் மணமகளை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்று அவருடைய தோல் தொடர்பான சில  பிரச்சனைக்கு தீர்வு காண சென்று உள்ளார். ஆனால் அதற்கு பின்னும் மணமகன் எதை சொல்லியும் கேட்காமல், மனதளவில் மிகவும் பாதிப்பு அடைந்து உள்ளார்.தான் எதிர்பார்த்த பெண் வேறு மாதிரி இருந்ததாகவும், ஆனால் இந்த பெண் போட்டோவில் இருப்பது போல் நேரில் இல்லை என்பதை நினைத்து மிகவும் வேதனை கொண்டு உள்ளார் 

இதற்கிடையில், நேற்று முன்தினம் செவ்வாய் அன்று இரவு நண்பரின் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்ற மாதீன், நண்பரின் அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார். புதுமாப்பிள்ளை வெகு நேரமாகியும் வீட்டிற்கு வர வில்லை என்பதால் நெடு நேரம் அவரை தேடி பார்த்து, பின்னர் அவருடைய மொபைலுக்கு அழைத்த போது தான் தெரிய வந்துள்ளது. அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று... இதனால் அதிர்ச்சி அடைந்த மாப்பிள்ளை வீட்டார் மகனை பறிக்கொடுத்த விரக்தியில் மனமகள் வீட்டார் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர். இந்த சம்பவத்தால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.

PREV
click me!

Recommended Stories

இதுதான் மறுசுழற்சியா? கேரளாவில் சர்ச்சையை கிளப்பிய பீர் பாட்டில் கிறிஸ்துமஸ் மரம்!
உக்ரைன் போர்.. ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்த 26 இந்தியர்கள் பலி; போர்முனையில் சிக்கியுள்ள 50 பேர்!