செஞ்சுரி அடிக்கப் போகுது பெட்ரோல் விலை… இனி சில்லறை பிரச்சனையே இருக்காது!!

By Selvanayagam PFirst Published Sep 7, 2018, 10:01 AM IST
Highlights

சென்னையில் இன்று பெட்ரோல் விலை 51 காசுகள் உயர்ந்து லிட்டர் ஒன்றுக்கு 83 ரபாய் 13 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. விரைவில் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தொடும் என்கின்றனர் பெட்ரோல் பங்க் டீலர்கள். ரவுண்டாக 100 ரூபாய் என்றால் இனி சில்லறை பிரச்சனை இருக்காது என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. 

கடந்த மே மாதத்தில் இவற்றின் விலை உயர்ந்து கொண்டே சென்றது. பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்த நிலையில் அது வாகன ஓட்டிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.  பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தி வருகிறது . பெட்ரோல், டீசல் விலை உயர்வால், அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. 

அதுமட்டுமின்றி ஓட்டல் சாப்பாடு, உணவு பண்டங்களின் விலையும் உயர்கிற நிலை ஏற்பட்டு உள்ளது. இப்போதே ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் ஆங்காங்கே உயர்த்தப்பட்டு உள்ளது. கால்டாக்சி கட்டணமும் உயர்கிறது. இது சாமானிய மக்களுக்கு மிகுந்த வேதனையை அளித்து வருகிறது. 

இந்த நிலையில், இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை 51 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.83.13 ஆகவும், டீசல் விலை 56 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.76.17 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. அடுத்த 10 நாட்களில்  பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தொடும் என்கின்றர் பெட்ரோல் பங்கு உரிமையாளர்கள்.

இனி பெட்ரோல் பெட்ரோல் டீசல்  விலை உயர்வு தொடர்ந்து உய்ந்து கொண்அட போவது பொது மக்களை அச்சமடையத் செய்துள்ளது.

click me!