பிரம்மபுத்திராவில் நடந்த த்ரிலிங் சம்பவம்... 3 முறை குதித்து... 3 பேரை காப்பாற்றி அசுர சிறுவன்... மலைக்க வைக்கும் சாகசம்!

By vinoth kumarFirst Published Sep 7, 2018, 1:09 PM IST
Highlights

படகு கவிழ்ந்த விபத்தில் தத்தளித்த தாய் உள்ளிட்ட 3 பேரை காப்பாற்றிய சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அசாம் மாநிலம், வடக்கு கவுகாத்தியில் இருந்து கவுகாத்தி நகருக்கு செல்ல பிரம்மபுத்திரா நதியை படகில் கடந்து செல்வது வழக்கம்.

படகு கவிழ்ந்த விபத்தில் தத்தளித்த தாய் உள்ளிட்ட 3 பேரை காப்பாற்றிய சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அசாம் மாநிலம், வடக்கு கவுகாத்தியில் இருந்து கவுகாத்தி நகருக்கு செல்ல பிரம்மபுத்திரா நதியை படகில் கடந்து செல்வது வழக்கம். பயணிகளை அடுத்த கரைக்கு கொண்டு செல்வதற்காக படகுகள் உள்ளன. பிரம்மபுத்திரா ஆற்றைக் கடந்து செல்வதற்காக கடந்த புதன் அன்று வழக்கம்போல் பயணிகளுடன் படகு புறப்பட்டது. அந்த படகில் 40 பேர் இருந்தனர். 

வடக்கு கவுகாத்தில் உள்ள செயின்ட் அந்தோணி பள்ளியில் பயிலும் கமல் கிஷோர் தாஸ் என்ற சிறுவனும் படகில் இருந்தான். ஆறாம் வகுப்பு படிக்கும் கமல், தனது அம்மா, அத்தை ஆகியோருடன் படகில் இருந்தனர். ஆற்றில் படகு சென்று கொண்டிருந்தபோது திடீரென படகு கவிழ்ந்தது. இதில் பலர் ஆற்றில் மூழ்கினர். அப்போது கமலை, அவனது அம்மா, எப்படியாவது நீந்தி கரைக்கு சென்று விடு என்று கூறியுள்ளார். இதன் பிறகு நீந்தி கரைக்கு சென்றான் கமல். கரைக்கு சென்ற கமல், அம்மாவை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தான். 

மீண்டும் ஆற்றுக்குள் குதித்த கமல், படகு கவிழ்ந்த இடத்துக்கு வந்தான். அங்கு அவனது அம்மா தத்தளித்துக் கொண்டிருந்துள்ளார். இதையடுத்து, அவரதுதலைமுடியை இழுத்துக் கொண்டு அருகில் உள்ள மேடான பகுதிக்கு இழுத்துக் கொண்டு போனான். தலைமுடியை இழுப்பதால் அம்மாவுக்கு வலிக்கிறது என்பதை உணர்ந்த கமல், பிறகு தாயின் கையைப் பிடித்துக் கொண்டு சென்றுள்ளான்.

அத்தையைக் காணவில்லை என்பது தெரிய வந்ததும், உடனடியாக ஆற்றுக்குள் குதித்து அத்தையைத் தேடினான். தத்தளித்துக் கொண்டிருந்த அத்தையையும் கமல் கரைக்கு இழுத்து வந்தான். இதேபோல் மற்றொருவரின் உயிரையும் அப்படியே காப்பாற்றினான் கிஷோர். மூன்று பேரின் உயிரைக் காப்பாற்றிய கமலை பலர் பாராட்டு தெரிவித்தனர்.இது குறித்து கமல் கூறும்போது, ஞாயிறு மற்றும் புதன்கிழமைகளில் நீச்சல் பயிற்சி பெற்று வருகிறேன். அதனால்தான் என்னால் அவர்களைக் காப்பாற்ற முடிந்தது. என் அம்மாவுக்கு நீச்சல் தெரியாது. 

அதனால் உடனடியாக  போய் காப்பாற்றினேன். படகில் இருந்து விழுந்த பர்தா அணிந்த பெண், தன் குழந்தையைக் கையில் வைத்துக் கொண்டு தத்தளித்தார். அவரை காப்பாற்றப்பட்டால் என்றாலும், அவரது குழந்தை தண்ணீருக்குள் விழுந்து விட்டது. குழந்தையைக் காப்பாற்ற முடியவில்லை என்பது வருத்தமாக உள்ளது. கமலுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். அவன் தன்னைக் காப்பாற்றிக் கொள்வான் என்பது எனக்குத் தெரியும். அதனால்தான் அவனை நான் நீந்தி சென்று விடும்படி கூறினேன் என்று கமலின் அம்மா கூறியுள்ளார்.

click me!