கேரள மருத்துவமனைகளில் தமிழருக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு..! என்ன கொடுமடா இது?

Asianet News Tamil  
Published : Oct 02, 2017, 11:12 AM ISTUpdated : Sep 19, 2018, 01:14 AM IST
கேரள மருத்துவமனைகளில் தமிழருக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு..! என்ன கொடுமடா இது?

சுருக்கம்

kerala hospitals denied to treat tamil patients

கேரளாவில் அரசு மருத்துவமனைகளில் தமிழர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் அவலம் தொடர்ந்து நடந்து வருகிறது.

கடந்த மாதம் கொல்லம் அருகே நடந்த விபத்தில் படுகாயமடைந்த நெல்லையை சேர்ந்த முருகன் என்பவருக்கு கொல்லம் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டது. இதனால் முருகன் உயிரிழந்தார். இதுகுறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டு அந்த குழுவின் அறிக்கை கேரள அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மற்றொரு தமிழருக்கு சிகிச்சை அளிக்க கேரள மருத்துவமனைகள் மறுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கேரள மாநிலம் மலப்புரம் அருகே தமிழகத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரை மற்றொரு தமிழர் தாக்கிவிட்டார். இதனால் படுகாயமடைந்த ராஜேந்திரனுக்கு திரிச்சூர் அரசு மருத்துவமனை மறுத்துவிட்டதை அடுத்து கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கும் அவருக்கு சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டதால்  இறுதியாக கோவைக்கு அழைத்து வரப்பட்டு ராஜேந்திரனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

தமிழர்களுக்கு கேரள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க மறுக்கப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

திமுக ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு நாடு முழுவதும் சந்தி சிரிக்கிறது.. இபிஎஸ் ஆவேசம்..!
பாகிஸ்தான் முகத்தில் கரி..! ராணுவம் இனி கொக்கரிக்கவே முடியாது..! ஐ.நா. வெளியிட்ட அதிர்ச்சி..!