
அகிம்சையை ஆயுதமாகக் கொண்டு நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத்தந்த உன்னதமான தலைவர் மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி. தேசப்பிதாவான மகாத்மா காந்தியின் 148-வது பிறந்தநாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.
மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லி ராஜ்கோட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடியும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் அஞ்சலி செலுத்தினர். மலர் தூவி மோடி மரியாதை செலுத்தினார்.
துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரும் காந்தி நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினர்.
உலக அளவில் அகிம்சையின் அடையாளமாக கருதப்படும் காந்தியின் பிறந்ததினமான அக்டோபர் 2(இன்று) சர்வதேச அகிம்சை தினமாக பின்பற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.