காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி நடத்தும் பாரத் ஜோடோ யாத்திரையை ஒழுங்குபடுத்த கேரள அரசுக்கும், போலீஸாருக்கும் உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி நடத்தும் பாரத் ஜோடோ யாத்திரையை ஒழுங்குபடுத்த கேரள அரசுக்கும், போலீஸாருக்கும் உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கே. விஜயன் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், “காங்கிரஸ் வயநாடு எம்.பி.ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை சென்று வருகிறார்.
அவர் செல்லும்போது, காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டம் சாலை முழுவதையும் ஆக்கிரமித்துச் செல்கிறது. மிகக்குறைவான பாதையில்தான் வாகனங்கள் செல்லமுடிகிறது.
கெளதம் அதானிக்கு சரிவு! உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ்ன் அம்பானியும் பின்னடைவு
காங்கிரஸ், ராகுல் காந்தி, கேரள காங்கிரஸ் தலைவர் கே சுதாகரன், எதிர்க்கட்சித் தலைவர் சதீஸன் ஆகியோர் மத்தியஅரசு, மாநில அரசுகள் வகுத்துள்ள சட்டங்களை மதிக்காமல் யாத்திரையை நடத்துகிறார்கள். நீதிமன்றம் வகுத்துள்ள விதிகளையும் மூவரும் கடைபிடிக்கவில்லை. இந்த கேரள பொதுவழி சட்டம் 2011 பிரிவை அப்பட்டமாக மீறி யாத்திரை நடத்தப்படுகிறது.
பொதுமக்களை பாதிக்காதவகையில் யாத்திரையை நடத்த வேண்டிய பொறுப்புள்ள மாநிலஅரசு, போஸீலார் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது தன்னிச்சையான செயல். சட்டவிரோதமானது, நியாயமற்றது.
தங்கம் விலை இன்ப அதிர்ச்சி! காரணம் என்ன?சவரனுக்கு ரூ.300க்கு மேல் சரிவு :இன்றைய நிலவரம் என்ன?
ஊர்வலத்தை நடத்தும் விதம் போக்குவரத்து மற்றும் மக்கள் தங்களின் இயல்பான வாழக்கைக்கும் பெரும் இடையூறாக இருக்கிறது.யாத்திரை கடந்து செல்லும் பகுதிகளில் சாமானியர்களின் வாழ்க்கையை பாதிக்கப்படுகிறது. ஆதலால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நடத்தும் பாரத் ஜோடோ யாத்திரையை ஒழுங்குபடுத்த கேரள அரசுக்கும், போலீஸாருக்கும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ். மணிக்குமார், நீதிபதி ஷாஜி பி சாலி ஆகியோர் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கேரள அரசு தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்த பதில் மனுவில், “ ராகுல் காந்தி செல்லும் பாரத் ஜோடோ யாத்திரையால் மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை, எந்த இடத்திலும் போக்குவரத்து இடையூறு இல்லை.
சென்னையில் ஐ-போன்14 தயாரிப்பைத் தொடங்கியது ஆப்பிள் நிறுவனம்
சாலையின் ஓரமாக அமைதியான முறையில் யாத்திரை நடக்கிறது. விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. இதுவரை யாத்திரையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக எந்த புகாரும் இல்லை. யாத்திரை செல்பவர்களிடமும் அமைதியான முறையில் நடைபயணம் செல்லக் கோரி போலீஸாரும் அறிவுறுத்தி கண்காணித்து வருகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் “ மனுதாரர், தனது புகாருக்கு ஏற்ப போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவோ, மக்களுக்கு அசவுகரியங்கள் ஏற்பட்டதாகவோ உரிய ஆதாரங்களையும் அளிக்கவில்லை, தனது குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியவில்லை. இதையடுத்து, மனுதாரர் விஜயன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்வதாக” நீதிபதிகள் அறிவித்தனர்.
ராகுல் காந்தி செல்லும் பாரத் ஜோடோ யாத்திரை கடந்த 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. ஏறக்குறைய 150 நாட்கள் செல்லும் யாத்திரையில் 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களை கடந்து, 3,570 கி.மீ தொலைவு ராகுல் காந்தி பயணிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.