பிரதமர் மோடி வரும் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரு நாட்கள் குஜராத்துக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு பல ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், திட்டங்களையும் தொடங்கி வைக்க உள்ளார்.
பிரதமர் மோடி வரும் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரு நாட்கள் குஜராத்துக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு பல ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், திட்டங்களையும் தொடங்கி வைக்க உள்ளார்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
பிரதமர் மோடி வரும் 29 மற்றும் 30 ஆகிய இரு தேதிகளில் குஜராத்துக்கு இரு நாட்கள் பயணம் மேற்கொள்ள உள்ளார். 29ம்தேதி சூரத் செல்லும் பிரதமர் மோடி, ரூ.3400 கோடிக்கு மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கிவைத்தும், அடிக்கல் நாட்டுகிறார். அங்கிருந்து பாவ்நகர் சென்று ரூ.5200 கோடி மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
29ம் தேதி இரவு 7 மணி அளவில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி அரங்கில் 36-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இரவு 9மணி அளவில் ஜிஎம்சிடி மைதானத்தில் நடக்கும் நவராத்திரி விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
சோனியா கோபம்! ராஜஸ்தானில் காய்நகர்த்தும் கெலாட்! காங்கிரஸ் தலைவராகும் வாய்ப்பு குறைகிறது
செப்டம்பர் 30ம் தேதி காலை 10.30 மணிஅளவில் காந்திநகர்-மும்பை வந்தே பாரத்எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை காந்தி நகர் ரயில்நிலையத்திலிருந்து பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
இந்த ரயில் கலுபூர் ரயில் நிலையம் வரை பிரதமர் மோடி பயணிக்கிறார். அதன்பின் 11.30 மணிக்கு கலுப்பூர் ரயில் நிலையத்திலிருந்து தூர்தர்ஷன் கேந்திரா வரை செயல்படும் அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தை கொடியசைத்து பிரதமர் மோடி தொடங்கி வைக்கஉள்ளார்.
உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல்முறை!அரசியல்சாசன அமர்வு விசாரணை நேரலை
அதன்பின் 12 மணி அளவில், அகமதாபாத் மெட்ரோ திட்டத்தின் முதல்பகுதியை தொடங்கி வைக்கிறார். அதன்பின் அம்பாஜி செல்லும் பிரதமர் மோடி, மாலை 5.45 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியில் ரூ.7,200 கோடிக்கு பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இரவு 7மணிக்கு அம்பாஜி கோயிலில் தரிசனம் செய்து, பூஜை செய்யும் பிரதமர் மோடி, 7.45மணிக்கு நடக்கும் மகாஆரத்தியில் பங்கேற்கிறார்.
தாஜ் மஹாலைச் சுற்றி 500 மீட்டருக்குள் கடைகள் நடத்தத் தடை: உச்ச நீதிமன்றம் அதிரடி
சூரத் நகரில் ரூ.3400 கோடிக்கு குடிநீர் திட்டம், கழிவுநீர் திட்டம், ட்ரீம் சிட்டி, பயோடைவர்சிட்டி பார்க், உள்ளிட்ட கட்டுமானங்கள், நகரப்பேருந்து சேவை, மின்னணு வாகன சேவை ஆகியவற்றுக்கான அடிக்கல்லை பிரதமர் மோடி நாட்டுகிறார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.