ஹிஜாபை அனுமதிக்க உத்தரவிடமுடியாது.. ”சீருடை பள்ளிகளின் உரிமை..!” 2018ல் கேரள உயர்நீதிமன்றம் தந்த தீர்ப்பு..

Published : Feb 10, 2022, 05:45 PM IST
ஹிஜாபை அனுமதிக்க உத்தரவிடமுடியாது.. ”சீருடை பள்ளிகளின் உரிமை..!” 2018ல் கேரள உயர்நீதிமன்றம் தந்த தீர்ப்பு..

சுருக்கம்

கர்நாடகாவில் பள்ளிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதிக்க வேண்டி போராட்டங்கள் சர்ச்சையை கிளம்பி உள்ள நிலையில், கேரளாவில் 2018 ஆம் ஆண்டு இஸ்லாமிய மாணவிகள் தொடர்ந்த வழக்கு ஒன்றில் ஆடைக் கட்டுப்பாடு குறித்து முடிவெடுப்பது முற்றிலும் நிறுவனத்தின் உரிமைக்கு உட்பட்டது என்று கேரள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  

கர்நாடகாவில் பள்ளிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதிக்க வேண்டி போராட்டங்கள் சர்ச்சையை கிளம்பி உள்ள நிலையில், கேரளாவில் 2018 ஆம் ஆண்டு பள்ளியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப்பும், முழு கை சட்டையும் அணிய அனுமதிக்க வேண்டும் என்று தொடர்ந்த வழக்கில் ஆடைக் கட்டுப்பாடு குறித்து முடிவெடுப்பது முற்றிலும் நிறுவனத்தின் உரிமைக்கு உட்பட்டது என்று கேரள் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் கல்வி நிறுவனம் ஏற்றுக்கொண்ட சீருடைக்கு பதிலாக தலையில் முக்காடு மற்றும் முழுக்கை சட்டை அணிவதை அனுமதிக்க வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு கல்வி நிறுவனத்திற்கு நீதிமன்றம் அறிவுறுத்த முடியாது என கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் உள்ள கிருஸ்தவ அறக்கட்டளையான சிஎம்ஐ என்ற கல்வி நிறுவனத்தில் பயிலும் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் மற்றும் முழு கை சட்டை அணிந்து வர அனுமதிக்கக்கோரி கல்வி நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 

முன்னதாக பள்ளியில், மாணவிகள் தலையில் முக்காடு மற்றும் முழு கை சட்டை அணிந்து வந்தனர். இது பள்ளியின் சீருடைக்கு முரணாக இருப்பதாக கருதி பள்ளி அதிகாரிகள், பள்ளி சீருடையில் வருமாறு அறிவுறுத்தினர். ஆனால் , மாணவிகள் ஹிஜாப் மற்றும் முழுக் கை சட்டை அணிந்தும் வகுப்புகளுக்கு அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ. முஹம்மது முஸ்தாக், மனுதாரர்கள் முக்காடு மற்றும் முழுக்கை சட்டையுடன் வகுப்புகளில் கலந்து கொள்ள அனுமதிக்கலாமா என்பதை நிறுவனம் முடிவு செய்ய வேண்டும். ஆடைக் கட்டுப்பாடு குறித்து முடிவெடுப்பது முற்றிலும் நிறுவனத்தின் உரிமைக்கு உட்பட்டது என்று உத்தரவிட்டார். மேலும் இதுபோன்ற கோரிக்கைகளை பரிசீலிக்குமாறு நீதிமன்றத்தால் கூட நிறுவனத்திற்கு உத்தரவிட முடியாது என்று கேரள உயர் நீதிமன்றம் அப்போது கருத்து தெரிவித்தது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

கோவா கிளப் தீ விபத்தில் முக்கிய நபர் கைது.. யார் காரணம்? ரகசியத்தை உடைத்த முதல்வர்
நாங்க இருக்கோம்.. விமான பயணிகளுக்கு கைகொடுத்த ஏர் இந்தியா.. இனி நோ கவலை!