மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரின் வேட்புமனுவை நிராகரிக்கக் கோரிய மனு தள்ளுபடி

By SG Balan  |  First Published Apr 23, 2024, 3:54 PM IST

நாடாளுமன்றத் தேர்தலில் முதல் முறை போட்டியிடும் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரின் வேட்புமனுவை நிராகரிக்கக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.


தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகர் வேட்புமனுவை நிராகரிக்கக் கோரிய மனுவை கேரள உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்துள்ளது.

மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சிட்டிங் எம்பி சசி தரூரை எதிர்த்து அவர் போட்டியிடுகிறார்.

Tap to resize

Latest Videos

இந்நிலையில் ராஜீவ் சந்திரசேகரின் வேட்புமனுவை நிராகரிக்க உத்தரவிடக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதிகள் வி.ஜி.அருண், எஸ்.மனு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த மனு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தது.

அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில், தபால் வாக்குப்பதிவு கூட நடத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது. தேர்தல் அதிகாரி மனுவை ஏற்றுக்கொண்டதால், தேர்தல் மனு மூலம் மட்டுமே இந்த விவகாரத்தை எழுப்ப முடியும் என்றும் நீதிமன்றம் கூறியது. மேலும், தேர்தல் நடைமுறைகள் போன்றவற்றில் தலையிட முடியாது எனக் கூறி நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.

'கேரள மக்கள் காங்., இடதுசாரிகள் மீது கோபமாக இருக்கிறார்கள்': அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் சிறப்புப் பேட்டி

காங்கிரஸ் தலைவர் அவானி பன்சால் மற்றும் பெங்களூரைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ரெஞ்சித் தாமஸ் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், பாஜக வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகர் தனது சொத்து விவரம் குறித்து தேர்தல் ஆணையத்தில் பொய்யான பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 மற்றும் தேர்தல் விதிகள், 1961 ஆகியவற்றின் விதிகளை மீறுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு 2018 மாநிலங்களவை தேர்தலின்போதும் ராஜீவ் சந்திரசேகர் இதேபோல சொத்து விவரம் குறித்து பொய்யான தகவல்களை அளித்துள்ளதாகவும் கூறுகிறது.

ராஜீவ் சந்திரசேகர் தனது பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ள மொத்த அசையும் சொத்துக்கள் 9 கோடியே 25 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்ஸட் டெபாசிட்டில் 9.40 சதவீதம் வட்டி பெறுவது எப்படி? அதிக லாபம் தரும் ஸ்மார்ட் முதலீடு!

click me!