அதிகரிக்கும் கொரானா வைரஸ் பாதிப்பு... மாநில பேரிடராக அறிவித்த கேரளா!

By Asianet TamilFirst Published Feb 3, 2020, 11:07 PM IST
Highlights

சீனாவில் பேயாட்டம் ஆடிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் நுழைந்துள்ளது. சீனாவிலிருந்து கேரளா திரும்பிய மாணவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கேரளாவில் அடுத்தடுத்து மேலும் இரண்டு பேருக்கு கொரான வைரஸின் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. 

கொரானா வைரஸ் பாதிப்பு கேரளாவில் அதிகரித்துள்ள நிலையில், கொரானா பாதிப்பை மாநில பேரிடராக அந்த மா நில அரசு அறிவித்துள்ளது.
சீனாவில் பேயாட்டம் ஆடிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் நுழைந்துள்ளது. சீனாவிலிருந்து கேரளா திரும்பிய மாணவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கேரளாவில் அடுத்தடுத்து மேலும் இரண்டு பேருக்கு கொரான வைரஸின் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால், கேரளாவில் கொரானா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3-ஆக அதிகரித்துள்ளது.


இதனால் கேரளாவில் தீவிர மருத்துவ விழிப்புணர்வு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்நிலையில், கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை மாநில பேரிடராக மா நில அரசு அறிவித்துள்ளது. மூன்று பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதியானதால், இந்த அறிவிப்பை கேரள அரசு வெளியிட்டது. மாநில சுகாதார அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டதோடு, “அரசாங்கத்திடம் தெரிவிக்காமல் சீனாவில் இருந்து கேரளா திரும்பியவர்களிடமும் கொரோனா வைரஸ் பாதிப்புக்குழு ஆய்வு மேற்கொள்ளும்” என்று அறிவித்தார்.
கொரானா வைரஸ் பாதிப்பால், கேரளாவில் மருத்துக் கண்காணிப்புகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

click me!