மீண்டும் ரயில் கட்டண உயர்வா..? திக் திக் மனநிலையில் மக்கள்..!

By Manikandan S R SFirst Published Feb 1, 2020, 11:00 AM IST
Highlights

ரயில் கட்டணம் உயர்த்தப்படுமா? என்கிற அச்சமும் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. ஆனால் அதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மத்திய அரசின் பட்ஜெட் பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. காலை 11 மணியளவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் 2020-21-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இரண்டாம் முறையாக பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இதுவாகும். அதே போல நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்ற பிறகு இரண்டாம் முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

மத்திய பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டும் இணைந்து தாக்கல் செய்யப்படவுள்ளது. புதிய ரெயில்கள், புதிய வழித்தடங்கள் பற்றிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எல்லா மாநிலங்களில் இருந்தும் எதிர்பார்ப்புகள் இருக்கிறது. அதே நேரத்தில் ரயில் கட்டணம் உயர்த்தப்படுமா? என்கிற அச்சமும் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. ஆனால் அதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த ஜனவரி 1 ம் தேதி தான் ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதனால் மீண்டும் கட்டண உயர்வு இருக்காது என்று தெரிகிறது.

அவற்றுடன் 2024 ம் ஆண்டுக்குள் அனைத்து ரயில் வழித்தடங்களையும் மின்சார மயமாக்க ரயில்வே வாரியம் திட்டமிட்டு இருக்கிறது. அதற்கான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற கூடும். 2024ம் ஆண்டுக்குள் ரயில்வே துறை 100 சதவீதம் அளவிற்கு மின்மயம் ஆக்கப்படும் என்றும் அவ்வாறு நிகழ்ந்தால் உலகிலேயே 100 சதவீதம் மின்சாரத்தில் இயங்கக்கூடிய மிகப்பெரிய முதல் ரயில்வே துறையாக இந்திய ரயில்வே இருக்கும் எனவும் கடந்த வாரம் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் பேசியது குறிப்பிடத்தக்கது.

Also Read: ஆதிபாட்டன் சிவனுக்கு குடமுழுக்கு..! தாறுமாறாக கொண்டாட்டத்திற்கு அழைக்கும் சீமான்..!

click me!