தமிழிசைக்கு ஆதரவாக களத்தில் குதித்த கேரள காங்கிரஸ்: அமித் ஷாவுக்கு கடும் கண்டனம்!

By Manikanda Prabu  |  First Published Jun 12, 2024, 6:39 PM IST

சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா மேடையில் தமிழிசையை கண்டித்த மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு கேரள காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலோடு சில மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. அந்த வகையில், ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் அபார வெற்றி பெற்றது.

தொடர்ந்து, ஆந்திர மாநிலத்தின் முதல்வராக 4ஆவது முறையாக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு விஜயவாடா அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்ட விழாவில் பதவியேற்றுக்கொண்டார். கூட்டணி கட்சியான ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் துணை முதல்வராக பொறுப்பேற்றார். மேலும் 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

Tap to resize

Latest Videos

இந்த விழாவில், முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, ஜே.பி.நட்டா, நிதின் கட்கரி, ரஜினிகாந்த், சிரஞ்சீவி, ஓ.பன்னீர் செல்வம், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது, விழா மேடைக்கு வந்த தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு வணக்கம் தெரிவித்தார். அப்போது அமித் ஷா, தமிழிசையை அழைத்துப் பேசினார். தமிழிசை ஏதோ சொல்ல வர, அதை அமித் ஷா மறுப்பது போல் சைகை காட்டி பேசும் வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. பாஜகவின் உள்கட்சி விவகாரத்தை பொதுவெளியில் பேசியதற்காக, தமிழிசை சவுந்தரராஜனை அமித் ஷா கண்டித்ததாக கூறப்படுகிறது.

வெற்றிகரமான தோல்வி... சசி தரூருக்கு டஃப் கொடுத்த ராஜீவ் சந்திரசேகர்..!

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும், தமிழிசைக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளதாக தெரிகிறது. தரம்தாழ்ந்த விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என தன்னை விமர்சித்த பாஜகவினருக்கு வெளிப்படையாக ஊடகங்களில் தமிழிசை கண்டனம் தெரிவித்தார். தொடர்ந்து, அண்ணாமலை வார் ரூம் பற்றி பாஜக மூத்த தலைவர்கள் பலரும் சமூக  ஊடகங்களில் விமர்சித்து வருகின்றனர். இந்த பின்னணியில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில், தமிழிசையை உள்துறை அமைச்சர் அமித் ஷா  கண்டிப்பது போன்ற வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. ஆனால், அந்த வீடியோவில் அவர்கள் இருவரும் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பது அதிகாரப்பூர்வமாக இதுவரை தெரியவில்லை.

 

BJP's culture and attitude towards women.

Anyone with some self-respect will give it back to him and quit, . Being a qualified doctor and a former governor, you don't have to take such insults, that too from a history sheeter! pic.twitter.com/ME3vHMcs3A

— Congress Kerala (@INCKerala)

 

இந்த நிலையில், சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா மேடையில் தமிழிசையை கண்டித்த மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு கேரள காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கேரளா காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில், “இதுதான் பெண்களுக்கு எதிரான பாஜகவின் கலாசாரம் மற்றும் நடத்தை. சுயமரியாதை உள்ளவராக இருந்தால், தக்க பதிலடி கொடுத்து தமிழிசை கட்சியில் இருந்து விலக வேண்டும். மருத்துவரும், முன்னாள் ஆளுநருமான நீங்கள் குற்ற பின்னணி உடையவரிடம் இருந்து இதுபோன்ற அவமதிப்பை சகித்துக் கொள்ளக் கூடாது.” என பதிவிடப்பட்டுள்ளது.

click me!