வெற்றிகரமான தோல்வி... சசி தரூருக்கு டஃப் கொடுத்த ராஜீவ் சந்திரசேகர்..!

By Manikanda Prabu  |  First Published Jun 12, 2024, 5:45 PM IST

திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகர் முன்னாள் அமைச்சர்களிலேயே குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார்


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024 நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜகவுக்கு எதிர்பார்த்த வெற்றி கிட்டவில்லை. பாஜக மட்டும் தனித்து 240 தொகுதிகளிலேயே வெற்றி பெற முடிந்தது. ஆட்சியமைக்க மொத்தம் 272 இடங்கள் தேவை என்ற நிலையில், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாஜக மத்தியில் ஆட்சியமைத்துள்ளது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்றுள்ளார்.

முன்னதாக, டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமையகத்தில் பிரதமர் ஆற்றிய உரையில் பாஜக தொண்டர்களை பாராட்டி பேசினார். குறிப்பாக, கேரளாவில் பாஜக கால் பதித்துள்ளது பற்றியும், தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்தது குறித்தும் பிரதமர் மோடி பெருமிதமாக பேசினார். பாஜகவுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காவிட்டாலும், மிஷன் சவுத் என்ற அக்கட்சியின் நீண்டகால நோக்கத்துக்கு ஓரளவேனும் பலன் கிடைத்துள்ளது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

Tap to resize

Latest Videos

குறிப்பாக, கேரளாவில் இந்த முறை பாஜகவுக்கு 5 இடங்களாவது கிடைக்கும் என கணிக்கப்பட்டது. தேர்தல் பிரசாரத்தின்போது, கேரளாவில் பாஜகவுக்கு இரட்டை இலக்க பிரதிநிதித்துவம் வேண்டும் என நரேந்திர மோடி சூளுரைத்தது இங்கு கவனிக்கத்தக்கது. ஆனால், கேரளாவின் திரிசூரில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது. பெரிதும் எதிர்பார்ப்புக்குள்ளான அம்மாநிலத்தின் திருவனந்தபுரம் தொகுதியில் பாஜக தோல்வியடைந்தது.

கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக சிட்டிங் எம்.பி.யாக இருந்த சசி தரூர், பாஜக சார்பில் மத்திய இணையமைச்சராக இருந்த ராஜீவ் சந்திரசேகர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி சார்பாக பன்யன் ரவீந்திரனும் களம் கண்டதால் மும்முனை போட்டி நிலவியது.

பாஜக சார்பாக போட்டியிட்ட ராஜீவ் சந்திரசேகரின் குடும்பம் கேரள மாநிலம் திருச்சூர் வம்சாவளியை சேர்ந்தது. எனவே, திருவனந்தபுரம் தொகுதிக்கான தேர்தல் அரசியலில் அவரால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனவும், தெற்கில் தனது இருப்பை வலுப்படுத்து முடியும் எனவும் பாஜக நம்பியது. இந்த யுக்தியின் ஒரு பகுதியாகவே அவரை திருவனந்தபுரம் வேட்பாளராக பாஜக அறிவித்தது.

ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி மவுனம் ஏன்? ராகுல் காந்தி கேள்வி!

திருவனந்தபுரம் தொகுதியை காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளுமே கவுரவப்போட்டியாக கருதியதால், இந்த தொகுதி பெரிதும் எதிர்பார்ப்புக்குள்ளானது. மத்திய இணையமைச்சராக இருந்த ராஜீவ் சந்திரசேகருக்கு இது முதல் மக்களவைத் தேர்தல். சிட்டிங் எம்,பி.யான சசி தரூர் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் அந்த தொகுதியை தன் வசம் வைத்துள்ளார். அவருக்கு அங்கு தனிப்பட்ட செல்வாக்கும் உள்ளது. இதனால், காங்கிரஸ் - பாஜக ஆகிய கட்சிகள் இடையே மட்டும் கடும் போட்டி நிலவியது. இரு கட்சிகளின் வேட்பாளர்களும் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டனர். பல்வேறு தேர்தல் யுக்திகளை கையாண்டனர். வாக்கு எண்ணிக்கையின்போது கூட முன்னணி நிலவரங்கள் மாறிமாறி வந்தன.

இறுதியாக, திருவனந்தபுரம் தொகுதியை காங்கிரஸ் தக்க வைத்துக் கொண்டது. இருப்பினும், பாஜக மற்றும் அதன் வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகருக்கு இது வெற்றிகரமான தோல்விதான். ஏனெனில், மோடி 2.0 கேபினட்டில் அமைச்சர்களாக இருந்த சுமார் 20 பேர் மக்களவைத் தேர்தல் 2024இல் தோல்வியடைந்துள்ளனர். அந்த அமைச்சர்களிலேயே மிகவும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் ராஜீவ் சந்திரசேகர் தோல்வியடைந்துள்ளார். கேரளாவின் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸின் சசி தரூரிடம் 16,077 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே ராஜீவ் சந்திரசேகர் தோல்வியடைந்துள்ளார்.

கடந்த 2009 தேர்தலில், சசி தரூர் கிட்டத்தட்ட 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இருப்பினும், 2014 ஆம் ஆண்டில், பாஜக வேட்பாளர் ராஜகோபால் சசி தரூருக்கு கடுமையான சவாலாக இருந்தார். இதனால், அந்த தேர்தலில் அவர் 15,470 வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றார். ஆனாலும், 2019 தேர்தலில் நான்கு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று சசி தரூர் வெற்றி பெற்றார். தொடர்ந்து, 2024 மக்களவைத் தேர்தலில் சசி தரூருக்கு ராஜீவ் சந்திரசேகர் கடுமையான போட்டியாக விளங்கியதால், 16,077 வாக்குகள் வித்தியாசத்திலேயே சசி தரூரால் வெற்றி பெற முடிந்தது.

பாஜகவை பொறுத்தவரை மற்ற கட்சிகளுக்கு முன்னதாகவே வேட்பாளர் பட்டியலை அறிவித்து விடும். இதனால், வேட்பாளர்கள் அந்த தொகுதியில் பிரசாரம் செய்வதற்கும், அறிமுகமாவதற்கும் கூடுதல் நேரம் இருக்கும். ஆனால், ராஜீவ் சந்திரசேகரை பொறுத்தவரை தொகுதியில் நன்கு அறிமுகமான சசி தரூரை எதிர்த்து பிரசாரம் செய்ய அவருக்கு 35 நாட்கள் மட்டுமே இருந்தன. 

அத்துடன், திருவனந்தபுரம் தொகுதியில் 2009 முதல் போட்டியிட்டு வெற்றி பெற்று வரும் சிட்டிங் எம்.பி.யான சசி தரூருக்கு தொகுதி முழுக்க நன்கு அறிமுகமும், தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால், அவரை எதிர்த்து போட்டியிட்ட ராஜீவ் சந்திரசேகருக்கு அந்த தொகுதியே புதியது. இருப்பினும், அவரது தேர்தல் உத்திகளால் சசி தரூருக்கு கடுமையான சவாலாக இருந்து, குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தது உண்மையில் ஆச்சரியமளிக்கும் விஷயம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். வெற்றிகரமான தோல்வியடையும் வகையில், போட்டி எவ்வளவு நெருக்கமான இருந்தது என்பதை அவரது எதிர்ப்பாளர்கள் கூட ஒப்புக்கொள்ளும் அளவுக்கு தேர்தல் களத்தில் அவரது செயல்பாடுகள் இருந்துள்ளன என்றால் மிகையாகாது.

ஏனெனில், மோடி 2.0 கேபினட்டில் அமைச்சர்களாக இருந்த சுமார் 20 பேர் மக்களவைத் தேர்தல் 2024இல் தோல்வியடைந்துள்ளனர். அந்த அமைச்சர்களிலேயே மிகவும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் அதாவது 16,077 வாக்குகள் வித்தியாசத்தில் ராஜீவ் சந்திரசேகர் தோல்வியடைந்துள்ளார்.

அமேதியில் போட்டியிட்ட ஸ்மிருதி இரானி 1,67,196 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார். அதேபோல், லக்கிம்பூர் கேரியில் போட்டியிட்ட அஜய் மிஸ்ரா 34,329, பங்குராவில் போட்டியிட்ட சுபாஸ் சர்கார் 34,329, ஜார்கண்டில் போட்டியிட்ட அர்ஜுன் முண்டா 1,49,675, பார்மரில் போட்டியிட்ட கைலாஷ் சவுத்ரி 4,17,943, நீலகிரியில் போட்டியிட்ட எல்.முருகன் 24,0585 வாக்குகள் வித்தியாசத்தில் என பாஜக முன்னாள் அமைச்சர்கள் பலரும் தோல்வியடைந்துள்ளனர்.

click me!