கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணாவின் நிறுவனத்துக்கு சிஎம்ஆர்எல் நிறுவனத்திடம் இருந்து ரூ.1.7 கோடி அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கேரள முதல்வர் பினராயி விஜயன், ஊழல் தடுப்புச் சட்டம் 1989 இன் கீழ் விசாரணை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என் பாஜக எச்சரித்துள்ளது. இதுகுறித்து பாஜக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், பினராயி விஜயனின் மகள் வீணாவின் நிறுவனமான எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் கொச்சி மினரல்ஸ் அண்ட் ரூட்டில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) நிறுவனத்திடம் இருந்து, ரூ.1.7 கோடி பெற்றதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இது தொடர்பாக பிரனாயி விஜயன் மீதும் அவர் மகள் வீணா மீதும் விசாரணை நடத்தப்படலாம் என பாஜக கூறியுள்ளது.
கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் டி வீணா கடந்த 3 ஆண்டுகளாக கொச்சி மினரல்ஸ் அண்ட் ரூட்டில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) என்ற தனியார் நிறுவனத்திடம் இருந்து மாதத் தவணையாக ரூ.1.72 கோடி பெற்றதாகக் கூறப்படுகிறது. வருமான வரி இடைக்கால தீர்வு வாரியம் முக்கிய நபர் ஒருவரின் செல்வாக்கினால் அவருக்கு பணம் வழங்கப்பட்டதாகக் கூறியுள்ளது என பாஜக சுட்டிக்காட்டியுள்ளது.
வீணாவும் அவரது நிறுவனமான எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸும் (Exalogic Solution) சிஎம்ஆர்எல் (CMRL) நிறுவனத்துக்கு தகவல் தொழில்நுட்பம், சந்தைப்படுத்தல் ஆலோசனை மற்றும் மென்பொருள் சேவைகளை வழங்க ஒப்புக்கொண்டனர். ஆனால், வருமான வரித்துறை சோதனையில் எந்த சேவையும் வழங்கப்படவில்லை என்பது தெரியவந்தது.
இருப்பினும், ஒப்பந்தத்தின்படி பணம் மாதாந்திர தவணைகளில் செலுத்தப்பட்டது என சிஎம்ஆர்எல் நிர்வாக இயக்குநர் எஸ் என் சசிதரன் கர்த்தா சொல்கிறார்.
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு
2017-20 ஆம் ஆண்டில் வீணா மற்றும் எக்ஸாலாஜிக் நிறுவனம் சட்டவிரோத பரிவர்த்தனை மூலம் ரூ. 1.72 கோடி பெற்றதாக வருமான வரித்துறை குற்றம் சாட்டியது. நீதிபதிகள் அம்ரபாலி தாஸ், ராமேஷ்வர் சிங் மற்றும் எம். ஜெகதீஷ் பாபு ஆகியோர் அடங்கிய தீர்வு வாரிய அமர்வு, வழங்கப்படாத சேவைகளுக்காக பணம் செலுத்தப்பட்டது என்பதை ஆதாரங்கள் மூலம் உறுதி செய்தது என்று கூறியுள்ள பாஜக வருமான வரித்துறை எழுப்பியுள்ள கேள்விகளின் அடிப்படையில் விசாரணை நடத்த வலியுறுத்தியுள்ளது.
சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகளின் அடிப்படையை கண்டறிய மத்திய புலனாய்வு அமைப்புகளின் விசாரணை அவசியம் என்றும் பாஜகவின் செய்தித்தொடர்பாளர் டாம் வடக்கன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சிஎம்ஆர்எல் நிறுவனத்தில் 27 ஆண்டுகள் பணிபுரிந்த தலைமை நிதி அதிகாரி கே.எஸ்.சுரேஷ்குமாரின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களும் அவரது அறிக்கைகளும் காங்கிரஸ், முஸ்லீம் லீக் மற்றும் சிபிஎம் கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் இந்த விவகாரத்தில் ரூ.95 கோடி வரை பணம் பெற்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது எனவும் பாஜக குற்றம்சாட்டுகிறது.
பொய் தகவல் கொடுத்தவர்களுக்கு இனி போராத காலம் தான்! வேட்டு வைக்கும் வருமான வரித்துறை!