மூளையை உண்ணும் அமீபாவால் கேரள சிறுவன் உயிரிழப்பு.. இந்த ஆபத்தான அமீபா எப்படி மனிதர்களை பாதிக்கும்?

By Ramya s  |  First Published Jul 8, 2023, 7:51 AM IST

இந்த அமீபா பொதுவாக சூடான நன்னீர் (ஏரிகள், ஆறுகள் மற்றும் வெந்நீர் ஊற்றுகள் போன்றவை) மற்றும் மண்ணில் காணப்படுகிறது.


கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் 10-வகுப்பு மாணவர் ஒருவர் மூளையை உண்ணும் அமீபா உடலில் நுழைந்ததால் உயிரிழந்தார். ஆலப்புழா பூச்சாக்கல் பகுதியைச் சேர்ந்த ஷாலினி மற்றும் அனில் குமார் ஆகியோரின் மகன் குருதத் (15) என்பவர் உள்ளூர் ஓடையில் நீந்தியபோது மூளையை உண்ணும் அமீபாவால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சூழலில் அந்த மாணவர் நேற்று உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.

Naegleria என்பது ஒரு சுதந்திரமாக வாழும் அமீபா, அதாவது, ஒரு செல் உயிரி. இது பொதுவாக சூடான நன்னீர் (ஏரிகள், ஆறுகள் மற்றும் வெந்நீர் ஊற்றுகள் போன்றவை) மற்றும் மண்ணில் காணப்படுகிறது. ஒரே ஒரு வகை Naegleria எனப்படும் மட்டுமே மக்களை பாதிக்கிறது. அவை Naegleria fowleri என்று அழைக்கப்படுகின்றன.

Tap to resize

Latest Videos

PM Modi : நான் கியாரண்டி.. ஊழல் செய்தவர்கள் ஒன்று கூடுகிறார்கள்.. காங்கிரஸ் கட்சியை வெளுத்த பிரதமர் மோடி

Naegleria fowleri அமீபா மனித உடலில் நுழைந்தவுடன், அது மூளைக்காய்ச்சலை (PAM) ஏற்படுத்துகிறது, இது பாதிக்கப்பட்டவரின் மரணத்திற்கு வழிவகுக்கிறது. இதற்கு முன்பு 2017ஆம் ஆண்டு ஆலப்புழாவில் இந்த நோய் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீரில் இருந்து அந்த அமீபா மூக்கு வழியாக உடலில் நுழையும் போது Naegleria fowleri அது அந்த நபரை பாதிக்கிறது என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பொதுவாக மக்கள் நீச்சல், டைவிங், அல்லது ஏரிகள் மற்றும் ஆறுகள் போன்ற நீருக்கடியில் தலையை வைக்கும் போது நடக்கும். அமீபா பின்னர் மூக்கு வழியாக மூளைக்குச் செல்கிறது. பின்னர் அந்த அமீபா, மூளை திசுக்களை அழித்து, முதன்மை அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் (PAM) எனப்படும் பேரழிவு நோய்த்தொற்றை ஏற்படுத்துகிறது. PAM கிட்டத்தட்ட எப்போதும் ஆபத்தானது.

பொதுவாக தொற்று எற்பட்ட 5 நாட்களுக்குப் பிறகு அறிகுறிகள் காணப்படுகின்றன, ஆனால் அவை 1 முதல் 12 நாட்களுக்குள் தொடங்கலாம். தலைவலி, காய்ச்சல், குமட்டல் அல்லது வாந்தி போன்ற அறிகுறிகள் இருக்கலாம். பிந்தைய அறிகுறிகளில் கழுத்து இறுக்கம், குழப்பம், கவனமின்மை, வலிப்பு, மாயத்தோற்றம் மற்றும் கோமா ஆகியவை அடங்கும். அறிகுறிகள் தொடங்கிய பிறகு, நோய் வேகமாக முன்னேறி, பொதுவாக சுமார் 5 நாட்களுக்குள் மரணத்தை ஏற்படுத்துகிறது. சில நோயாளிகள் 18 நாட்கள் வரை உயிர்வாழலாம் என்று நோய் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் வேகமாக பரவும் எலிக்காய்ச்சல் : என்னென்ன அறிகுறிகள்? நோயை எப்படி தடுப்பது?

click me!