கேரளா 80 நாட்கள் 255 பேர் குணம்... தமிழ்நாடு 40 நாட்கள் 365 பேர் குணம்... யாரு பெஸ்ட் சொல்லுங்க..!

By vinoth kumarFirst Published Apr 19, 2020, 11:30 AM IST
Highlights

இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான்உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வேகம் எடுத்துள்ளது. இந்தியாவில் மொத்தம் 15,712 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 507 பேரி உயிரிழந்துள்ளனர். 2,231 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆனால், இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா இரண்டு மாநிலங்களில் கொரோனா கட்டுக்குள் வர தொடங்கி உள்ளது.

கொரோனா கோரப்பிடியில் இருந்து தமிழகம் மற்றும் கேரளாவும் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. இன்னும் சில வாரங்களில் இரண்டு மாநிலங்களும் கொரோனா இல்லாத மாநிலமாக உருவாக வாய்ப்புள்ளது. 

சீனாவின் பிறப்பிடமான கொரோனா வைரஸ் அழையா விருந்தாளியாக 200க்கும் மேற்பட்ட நாடுகளில் அடியெடுத்து வைத்து பெரும் உயிர் பலியை ஏற்படுத்தி வருகிறது. ஏழை, பணக்கார நாடுகள் என்ற பாரபட்சம் இல்லாமல் மனித குலத்திற்கு எதிராக வந்து நிற்கிறது. கண்ணுக்கே தெரியாத அந்த நுண்ணுயிரியிடமிருந்து தற்காத்துக்கொள்ள மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நோய் சமுதாய பரவலாக மாறிவிடுமோ என்ற அச்சத்தில் மக்கள் இருந்து வருகின்றனர்.

இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான்உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வேகம் எடுத்துள்ளது. இந்தியாவில் மொத்தம் 15,712 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 507 பேரி உயிரிழந்துள்ளனர். 2,231 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆனால், இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா இரண்டு மாநிலங்களில் கொரோனா கட்டுக்குள் வர தொடங்கி உள்ளது.

கேரளாவில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களாகவே  ஒற்றை இலக்கத்திலேயே கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை இருந்து வருகிறது. இந்த 8 நாட்களில் 129 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டுள்ளனர். மொத்தம்  80 நாட்கள் 255 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆகையால், கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வருவதால் பெரும்பாலான பகுதிகளில் கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சரியான திட்டமிடல் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக கொரோனாவில் இருந்து தமிழ்நாடு மீண்டு வருகிறது. தமிழகத்தில் புதிய நோயாளிகளை விட டிஸ்சார்ஜ் செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுவரை தமிழகத்தில் 1372 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இதுவரை 365 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் 2 மாநிலங்களும் விரைவில் கொரோனாவில் இருந்து மீண்டு வர வாய்ப்புள்ளது.

click me!