சிறுவனை கடித்துக் குதறிய தெரு நாய்கள்! பேச்சுத்திறன் குறைபாடு கொண்ட சிறுவன் பரிதாப பலி!

By SG Balan  |  First Published Jun 12, 2023, 10:43 AM IST

கேரள முதல்வர் பினராயி விஜயன் அமெரிக்காவில் கேரளா மாடல் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது, தெருநாய் தாக்குதலுக்கு உள்ளான மாற்றுத்திறனாளி சிறுவன் உயிரிழந்தது பரவலான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.


கண்ணூர் முழப்பிலங்காட்டில் தெருநாய்கள் தாக்கியதில் 11 வயது பேச்சுத் திறனற்ற சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். நிஹால் என்ற சிறுவன் பலத்த காயங்களுக்கு உள்ளானான்.

நிஹால் மாலை 5 மணி அளவில் வீட்டில் இருந்து காணாமல் போனார். குடும்பத்தினர் சிறுவன் வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டு இருப்பதாக நினைத்து அலட்சியமாக இருந்துள்ளனர் எனத் தெரிகிறது. பின்னர் சிறுவனைக் காணவில்லை எனத் தேடிவந்த நிலையில், வீட்டில் இருந்து 500 மீட்டர் தொலைவில் சிறுவன் நிஹால் இறந்து கிடப்பதைக் கண்டனர்.

Tap to resize

Latest Videos

மோசமான வானிலையால் வழி மாறி பாகிஸ்தானுக்குள் நுழைந்த இண்டிகோ விமானம்

இரவு 8.30 மணி அளவில் வெறிச்சோடிய கிடந்த தெருவில் அப்பகுதி மக்கள் குழந்தையின் உடலைக் கண்டனர். சிறுவனின் உடலில் பல இடங்களில் நாய் கடித்த காயங்கள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பேச்சுத்திறன் தொடர்பான மாற்றுத் திறனாளியான அந்தச் சிறுவன் தெருநாய்கள் தாக்குதலுக்கு மத்தியில், உதவியை நாட முடியவில்லை என்று கூறப்படுகிறது.

சிறுவன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் உடல் இரத்த வெள்ளத்தில் இருந்த சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். சிறுவனின் சடலம் தலச்சேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது. மகன் இறந்துவிட்டதை அறிந்ததும், வெளிநாட்டில் இருந்த தந்தை நௌஷாத், ஊர் திரும்புகிறார். இன்று காலை சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.

தெருநாய் தாக்குதலுக்கு உள்ளான மாற்றுத்திறனாளி சிறுவன் உயிரிழந்தது கேரளாவில் பரவலான விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கிறது. கேரள முதல்வர் பினராயி விஜயன் மீது எதிர்க்கட்சியினரும் சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

மனைவி பெயரில் வாங்கிய சொத்து பினாமி சொத்து அல்ல: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

click me!