லக்கிம்பூர் ஃபைல்ஸ்னு ஏன் ஒரு படம் எடுக்கக் கூடாது.. பாஜகவை பங்கமாக கலாய்த்த அகிலேஷ் யாதவ்.!

Published : Mar 17, 2022, 10:45 PM ISTUpdated : Mar 17, 2022, 10:48 PM IST
லக்கிம்பூர் ஃபைல்ஸ்னு ஏன் ஒரு படம் எடுக்கக் கூடாது.. பாஜகவை பங்கமாக கலாய்த்த அகிலேஷ் யாதவ்.!

சுருக்கம்

1990-களில் காஷ்மீர் பண்டிட்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடுமைகளை மையமாக வைத்து ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை விவேக் அக்னிஹோத்ரி இயக்கியுள்ளார். இந்தப் படத்தைப் பார்த்த பிரதமர் மோடி தொடங்கி பாஜக தலைவர்கள் புகழ்ந்து பேசி வருகிறார்கள். இந்தப் படத்துக்கு பாஜக ஆளும் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், கோவா ஆகிய மாநிலங்களில் வரிவிலக்கு சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் ஃபைல்ஸ் படம் எடுக்கப்படும்போது, லக்கிம்பூரில் போராட்டம் நடத்திய விவசாயிகள் ஜீப் மோதி நசுக்கிக்கொன்ற சம்பவத்தை வைத்து ஏன் ‘லக்கிம்பூர் ஃபைல்ஸ்’ படம் எடுக்கக்கூடாது? என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.  

1990-களில் காஷ்மீர் பண்டிட்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடுமைகளை மையமாக வைத்து ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை விவேக் அக்னிஹோத்ரி இயக்கியுள்ளார். இந்தப் படத்தைப் பார்த்த பிரதமர் மோடி தொடங்கி பாஜக தலைவர்கள் புகழ்ந்து பேசி வருகிறார்கள். இந்தப் படத்துக்கு பாஜக ஆளும் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், கோவா ஆகிய மாநிலங்களில் வரிவிலக்கு சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு ஐஎம்டிபி இணையதளத்தில் 9.9 என ரேட்டிங் பதிவாகியிருந்தது. வழக்கத்துக்கு மாறான வகையில் இது இருந்ததால் 8.3 ஆகக் குறைக்கப்பட்டது. ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை வைத்து  பாஜகவினர் தீவிரமாக பிரசாரம் செய்யும் நிலையில், 2002 குஜராத் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘பர்ஸானியா’ உள்ளிட்ட திரைப்படங்களையும், ஆவணப் படங்களைப் பற்றி சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

உத்தரப் பிரதேசத் தேர்தல் தோல்விக்குப் பிறகு சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், சீதாபூரில் முதன் முறையாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “காஷ்மீர் ஃபைல்ஸ் படம் எடுக்கப்படும்போது, லக்கிம்பூரில் போராட்டம் நடத்திய விவசாயிகள் ஜீப் மோதி நசுக்கிக்கொன்ற சம்பவத்தை வைத்து ஏன் ‘லக்கிம்பூர் ஃபைல்ஸ்’ படம் எடுக்கக்கூடாது?” என்று அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பினார். லக்கீம்பூரில் விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது ஜீப்பை ஏற்றி விவசாயிகள் கொல்லப்பட்டது சர்ச்சையானது. இதன் பின்னணியில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் இருந்ததாகப் புகார் எழுந்தது.

உத்தரப் பிரதேசத்தில் ஏழு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தபோது லக்கிம்பூர் கெரியில் பிப்ரவரி 23-ல்  நான்காவது கட்டத் தேர்தலில் அஜய் மிஸ்ரா கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன்தான் வாக்களிக்க வந்தார். லக்கிம்பூர் கெரியைச் சேர்ந்த அஜய் மிஸ்ரா இந்தத் தேர்தலில், தனது சொந்த ஊருக்குள்கூட பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கப் போகவில்லை. லக்கிம்பூர் கெரி பகுதியில் பாஜகவுக்கு ஒரு தொகுதியில்கூட வெற்றி கிடைக்காது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அங்குள்ள 8 தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெற்றது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அடேங்கப்பா! ரூ.400 கோடியா? மங்காத்தா பட பாணியில் சம்பவம்.. இந்தியாவின் மிகப்பெரிய கொள்ளை இதுதான்
உலகமே வியக்கப்போகும் இந்தியா... ஜனவரி 27-ல் வரும் மங்கள நாள்..! வயிற்றெரிச்சலில் டிரம்ப்..!