காங்கிரஸ் தட்டில் நல்லா தின்னுட்டு இப்போ எதிர்ப்பதா.? சோனியா-ராகுலுக்காக ஜி23 தலைவர்களை கும்மிய சிவசேனா.!

Published : Mar 17, 2022, 09:35 PM IST
காங்கிரஸ் தட்டில் நல்லா தின்னுட்டு இப்போ எதிர்ப்பதா.? சோனியா-ராகுலுக்காக ஜி23 தலைவர்களை கும்மிய சிவசேனா.!

சுருக்கம்

காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் கொடுக்க வேண்டும் என்றும் காந்தி குடும்பம் கட்சியின் தலைமை பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என்றும் ஜி23 தலைவர்கள் அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். டெல்லியில் அடுத்தடுத்து கூடி இத்தலைவர்கள் பேசி வருகிறார்கள்.

காங்கிரஸின் தட்டு மற்றும் கிண்ணத்தில் இருந்து சாப்பிட்டு விட்டு, குடித்து விட்டு ஏப்பம் விடும் தலைவர்கள் காங்கிரஸின் தோல்விக்காக புலம்புகிறார்கள் என்று காங்கிரஸ் ஜி23 தலைவர்களை சிவசேனா விமர்சனம் செய்துள்ளது. 

ஐந்து மாநிலத் தேர்தலில் பாஜக நான்கில் வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி பஞ்சாப்பில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி ஐந்து மாநிலத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததால், அக்கட்சிக்கு கடும் பின்னடவைச் சந்தித்துள்ளது. இதனையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கபில் சிபல், குலாம் நபி ஆசாத், மணிஷ் திவாரி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் காங்கிரஸ் தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தி வருகிறார்கள். இவர்கள் ஜி-23 என்ற பெயரில் குழுவாக செயல்பட்டு வருகிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் கொடுக்க வேண்டும் என்றும் காந்தி குடும்பம் கட்சியின் தலைமை பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என்றும் ஜி23 தலைவர்கள் அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். டெல்லியில் அடுத்தடுத்து கூடி இத்தலைவர்கள் பேசி வருகிறார்கள்.

ஏற்கனவே காங்கிரஸ் பலவீனமாக உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் இந்த சடுகுடு ஆட்டம் அக்கட்சியை ஆட்டம் காண வைத்து வருகிறது. இந்நிலையில், சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணி கட்சியான சிவசேனா ஆதரவுக் குரல் கொடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்குக் குடைச்சல் தரும் ஜி-23 தலைவர்களையும் அக்கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. இதுதொடர்பாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வில் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. அதில், “காங்கிரஸ் கட்சிக்கு இன்று காந்தி குடும்பம் மிகவும் தேவை. காந்திகள் தலைமையைத் துறந்தாலும் பரவாயில்லை. ஆனால், ஜி-23-ல் காங்கிரஸை முன்னோக்கி அழைத்து சென்று, அக்கட்சியை வெற்றி பெறச் செய்யும் தலைவர் இருக்கிறார்களா?  

காங்கிரஸின் தட்டு, கிண்ணத்தில் இருந்து சாப்பிட்டு விட்டு,  குடித்து விட்டு ஏப்பம் விடும் இந்தத் தலைவர்கள், காங்கிரஸின் தோல்விக்காகப் புலம்புகிறார்கள். இவர்களில் எத்தனை தலைவர்கள் 5 மாநில தேர்தலுக்கு பிரசாரம் செய்ய போனார்கள். எத்தனை பேர் உண்மையாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள். கேப்டன் அம்ரீந்தர் சிங் காங்கிரஸை விட்டு வெளியேறி, புதிதாக கட்சி தொடங்க முடிவு செய்தபோது, எத்தனை ஜி-23 தலைவர்கள் அவரை சமாதானப்படுத்த முன் வந்தார்கள். காங்கிரஸ் கட்சியின் தண்டு காய்ந்து விட்டது. இலையுதிர்காலமாக மரம் மாறி விட்டது. பாஜகவுக்கு சவால் விடும் வகையில் புதிய கதையை ராகுல் காந்தி கொண்டு வர வேண்டும்.” என்று சாம்னாவில் எழுதப்பட்டுள்ளது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!