
காஷ்மீரில் பனிச்சரிவு அதிகரித்திருப்பதற்கு புவிவெப்பமயமாதலும், சுற்றுச்சூழல் சீர்கேடுமே காரணம்
இதனால்தான் இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தார்கள் என ராணுவத் தளபதி புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.
காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக பல இடங்களில்
பனிச்சரிவு ஏற்பட்டு வருகிறது. முன்பை விட தற்போது பனிச்சரிவுகள் அதிகரித்துள்ளன.
இந்தப் பனிச்சரிவில் சிக்கி 20-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரிழந்திருக்கும் நிலையில்,
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த
இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத், பயங்கரமானஆயுதங்களை கொண்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி
பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்துவதால், காஷ்மீரில் மண் வளம் குறைந்து, ஆபத்தான நிலச்சரிவுகள் ஏற்படுவதாக கூறினார்.
மேலும் புவி வெப்பமயமாதல் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு காரணமாகவும் பனிப்பாறைகளில்
வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தற்போது பனிச்சரிவு நிகழ்ந்துள்ள இடங்களில் இதற்கு முன் இந்த இயற்கை சீற்றம் நிகழ்ந்ததில்லை
என்று சுட்டிக்காட்டிய ராவத், ஊடுருவலை தவிர்ப்பதற்காக ராணுவ நிலைகள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகள்
அனைத்தும், முன்பு தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்ட பகுதிகள் என்று பிபின் ராவத் தெரிவித்தார்.