தேர்வுகளை விழாக்களைப் போல கொண்டாட வேண்டும்: மாணவர்களுக்கு மோடி அறிவுரை

Asianet News Tamil  
Published : Jan 30, 2017, 10:18 AM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
தேர்வுகளை விழாக்களைப் போல கொண்டாட வேண்டும்: மாணவர்களுக்கு மோடி அறிவுரை

சுருக்கம்

மோடி ஒவ்வொரு மாதமும்  கடைசி ஞாயிற்றுக் கிழமை ‘மன் கீ  பாத் என்ற தலைப்பில் வானொலியில் உரையாற்றுவது வழக்கம். ஜனவரி மாதத்தின் கடைசி 

ஞாயிற்றுக்கிழமையான நேற்று அவர் ஆற்றியஉரை மாணவ-மாணவிகளின் தேர்வு பயத்தை போக்குவது, அதிக மதிப்பெண்கள் எடுப்பது ஆகிவற்றுக்கு 

ஆலோசனையும், அறிவுரை யும் கூறுவதாக இருந்தது.

பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெறும் பொதுத்தேர்வு குறித்த மாணவர்களின் 

கேள்விகளுக்கு மன் கீ  பாத்  நிகழ்ச்சியில் மோடி  பதில் அளித்தார்.

பொதுவாக மாணவர்களுக்கு  தேர்வு காலம், அழுத்தம் நிறைந்ததாக அமைந்து விடுகிறது. 

இதை நீங்கள் மகிழ்ச்சியான காலமாக கருதுகிறீர்களா அல்லது நெருக்கடி நிறைந்த நேரமாக உணர்கிறீர்களா?என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்றார்.

தேர்வு காலத்தை யாரெல்லாம் சந்தோஷமான காலமாக கருதுகிறார்களோ, அவர்கள் வெற்றி அடைகின்றனர். 

யாரெல்லாம் அழுத்தம் நிறைந்த நேரமாக நினைக்கின்றனரோ, அவர்கள் கவலைகொள்கின்றனர்.

எனவே, புன்சிரிப்புடன் தேர்வை எதிர்கொள்ளவேண்டும் என தெரிவித்த மோடி, இந்த நேரத்தில் நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்களோ அவ்வளவு சிறப்பான

மதிப்பெண்கள் உங்களுக்குகிடைக்கும். என்று மோடி குறிப்பிட்டார்.

ஒரு சந்தோஷமான மனதுதான் அதிக மதிப்பெண்களுக்கான திறவுகோல் எனவே. தேர்வு காலம் என்பது ஒரு கொண்டாட்டம். அதை ஒரு பண்டிகை, திருவிழா 

என உற்சாகமாக எடுத்துக் கொள்ளவேண்டும்.என்று மோடி மாணவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக பேசினார்.

மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல்கலாம், இதற்கு ஒரு பெரிய உதாரணமாக திகழ்கிறார். அவர் விமானப் படை 

வேலையில் சேருவதற்காக சென்றார். ஆனால் தோல்வி கண்டார். ஒருவேளை 

அவர் அந்ததோல்வியில் துவண்டு வாழ்க்கையில் தோற்றுப் போயிருந்தார் என்றால் 

நமது நாட்டுக்கு இவ்வளவு பெரிய விஞ்ஞானி கிடைத்திருப்பாரா? என மோடி கேள்வி எழுப்பினார்.

எனவே, உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். தேர்வு எழுதச் செல்லுங்கள். ஒவ்வொரு சவாலையும் 

எதிர்கொள்ளும் முன்பாக அதை கொண்டாட்டமாக மாற்றுங்கள். பிறகு சவால், சவாலாகவே இருக்காது என மோடி தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

இந்தியா முழுவதும் 908 சிறப்பு ரயில்கள் இயக்கம்.. தமிழ்நாட்டில் எவ்வளவு? மாஸ் காட்டும் ரயில்வே!
Hormuz Crisis: இந்த தீவுப் பக்கமே போகாதீங்க! இந்திய கப்பல்களுக்கு நேவி போட்ட புதிய உத்தரவு