சவால் விட்டு 10 லட்சத்தை கொட்டிய விவசாயி.. ஷாக்கான மகேந்திரா ஷோ ரூம் ஊழியர்கள்..கர்நாடகாவில் பரபரப்பு..!

By Thanalakshmi VFirst Published Jan 24, 2022, 4:21 PM IST
Highlights

நட்புக்காக திரைப்பட பாணியில் சரக்கு வாகனம் வாங்க சென்ற விவசாயியை ஷோ ரூம் பணியாளர்கள் அவமதிக்க, அரைமணிநேரத்தில் விவசாயி செய்த மாஸ் சம்பவத்தால் ஊழியர்கள் அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர்.
 

நட்புக்காக திரைப்பட பாணியில் சரக்கு வாகனம் வாங்க சென்ற விவசாயியை ஷோ ரூம் பணியாளர்கள் அவமதிக்க, அரைமணிநேரத்தில் விவசாயி செய்த மாஸ் சம்பவத்தால் ஊழியர்கள் அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர்.நடிகர் விஜயகுமார் மற்றும் சரத் குமார் ஆகியோரின் நடிப்பில் வெளியான நட்புக்காக திரைப்படத்தில், கோயம்புத்தூரில் இருந்து கார் வாங்க மூடை மூடையாக பணத்தை எடுத்து செல்லும் காட்சிகள் இருக்கும். அதனைப்போல ஒரு சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள துமகூரு மாவட்டம், ராமனபாளையா கிராமத்தை சேர்ந்த விவசாயியான கெம்பே கவுடா என்பவர் நேற்று முன்தினம் துமகூரு நகரில் உள்ள கார் ஷோரூமுக்கு சென்றுள்ளார். மேலும் விவசாய நிலத்தில் இருந்த உடையுடன் அங்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது ஷோ ரூம் ஊழியர்களிடம் தனக்கு விவசாய பொருட்களை எடுத்து செல்லவதற்கு ஒரு சரக்கு வாகனம் வாங்க வேண்டும் எனவும் அதற்காக வந்திருப்பதாகவும் கவுடா கூறியதாக தெரிகிறது. 

இதனைக்கேட்ட அங்கிருந்த பணியாளர்கள் சிரித்தபடி, உங்களிடம் முதலில் 10 ரூபாய் உள்ளதா? சரக்கு வாகனம் உங்களுக்கு வேண்டுமா? என்று கலாய்த்து இருக்கின்றனர். நான் உண்மையில் சரக்கு வாகனம் வாங்க வந்திருக்கிறேன் என்று கெம்பே கவுடா கூறவே, ஷோ ரூம் ஊழியர்கள் அரைமணிநேரத்தில் ரூ.10 இலட்சம் கொடுத்தால் சரக்கு வாகனம் தருகிறோம் என்று கூறியுள்ளனர்.

சவாலை ஏற்றுக்கொண்ட கெம்பே கவுடா, கிராமத்தில் இருக்கும் மாமாவுக்கு தொடர்பு கொண்டு பணத்தை எடுத்துவர சொல்லியுள்ளார். அவரும் பணத்தை எடுத்து வந்த நிலையில், ஷோ ஊழியர்கள் முன்னிலையில் பணம் வைக்கப்பட்டுள்ளது. இதனைக்கண்டு அதிர்ந்துபோன ஷோ ரூம் பணியாளர்கள், பல காரணம் கூறி சரக்கு வாகனம் டெலிவரி செய்ய 2 நாட்கள் ஆகும் என்று கூறியுள்ளனர்.

இதற்கு மறுப்பு தெரிவித்த கெம்பே கவுடா ஷோ ரூம் முன்னிலையில் போராட்டம் செய்யவே, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திலக்பார்க் காவல் துறையினர் கெம்பே கவுடாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காவல்துறையிடம் ஷோ ரூம் பணியாளர்கள் தன்னிடம் மரியாதை இல்லாமல் ஏளனமாக நடந்தக்கொண்டதாக விவசாயிக் குற்றச்சாட்டிய நிலையில், ஷோ ரூம் ஊழியர்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர். இந்த சம்பவம் இப்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

click me!