தொகுதிக்குள் கால் வைக்கக் முடியாது! கர்நாடக காங். வேட்பாளருக்கு வேட்டு வைத்த நீதிமன்றம்!

By SG Balan  |  First Published Apr 18, 2023, 6:45 PM IST

கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் வினய் குல்கர்னி தான் போட்டியிடும் தார்வாட் தொகுதிக்குள் செல்ல முடியாத நிலையில் இருக்கிறார்.


முன்னாள் அமைச்சரும் தார்வாட் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளருமான வினய் குல்கர்னி தான் போட்டியிடும் தொகுதிக்குள் நுழையக் கூடாது என்று கர்நாடக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வினய் குல்கர்னி பாஜகவைச் சேர்ந்த மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் யோகேஷ் கவுடா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் இந்த உத்தரவு வந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இதனை முன்னிட்டு தார்வாட் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் முன்னாள் அமைச்சர் வினய் குல்கர்னி. அவரை வேட்பாளராக அறிவித்த சில தினங்களில் அவர் தான் போட்டியிடும் தார்வாட் தொகுதிகுகள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

தன்பாலின ஈர்ப்பாளர்கள் தத்தெடுக்க அனுமதிக்கக் கூடாது: குழந்தைகள் நல ஆணையம் கோரிக்கை

யோகேஷ் கவுடா கொலை

பாஜக மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் யோகேஷ் கவுடா கொலை வழக்கை விசாரித்துவரும் பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தார்வாட் மாவட்டத்திற்குச் செல்ல அனுமதி கோரி வினய் குல்கர்னி மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் உச்ச நீதிமன்றமும் அவர் தார்வாட் செல்ல அனுமதி மறுத்துவிட்டதை காரணம் காட்டி அனுமதி வழங்க மறுத்துவிட்டது.

2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் யோகேஷ் கவுடா தார்வாட்டில் அவரது உடற்பயிற்சி கூடத்திற்கு வெளியே மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இந்தக் கொலை வழக்கு தொடர்பாக குல்கர்னி 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் குல்கர்னி தார்வாட் மாவட்டத்திற்குள் நுழைய முடியாது என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது.

போட்டித் தேர்வுகளை தமிழ் உள்பட 13 மொழிகளில் எழுதலாம்: மத்திய அரசு அறிவிப்பு

தடையை மீறினால்...

நீதிமன்ற நிபந்தனையை மீறினால் ஜாமீன் ரத்தாகிவிடும் என்றும் நீதிமன்றம் எச்சரித்திருக்கிறது. யோகேஷ் கவுடா கொலை வழக்கு தொடர்பான 120 சாட்சிகளில் 90 பேர் தார்வாட்டில் உள்ளனர் என்பதால், குல்கர்னியை தார்வாட் தொகுதிக்குள் அனுமதித்தால், வழக்கு விசாரணையில் குழறுபடி ஏற்படக்கூடும் என்று சிபிஐ தெரிவித்தால் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

வினய் குல்கர்னி சார்பாக அவரது மனைவி தார்வாட் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஆனாலும், குல்கர்னி மாவட்டத்திற்குள் வரமுடியாமல் இருப்பதால் அவரது வெற்றி வாய்ப்பு குறையும் என்று கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசப்படுகிறது. இதனால், காங்கிரஸ் தலைமை இந்தச் சிக்கல் குறித்து எடுக்கவேண்டிய நடவடிக்கை ப்ற்றி ஆலோசனை நடத்திக்கொண்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குமாரசாமியை தெறிக்க விடணும்! மாண்டியாவில் ஒன்றாகச் சேர்ந்து மாஸ்டர் பிளான் போடும் பாஜக, காங்கிரஸ்!

கர்நாடகாவில் உள்ள 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கலுக்கான அவகாசம் வரும் ஏப்ரல் 20ஆம் தேதியுடன் முடிகிறது. வாக்குப்பதிவு மே 10ஆம் தேதிநும் வாக்கு எண்ணிக்கை மே 13ஆம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

click me!