கர்நாடக தேர்தலில் மண்ணை கவ்விய 14 அமைச்சர்கள்.. இப்படியொரு நிலைமையா.! பரிதாபத்தில் பாஜக

By Raghupati RFirst Published May 13, 2023, 6:15 PM IST
Highlights

கர்நாடக தேர்தலில் முதல்வர் பசவராஜ் பொம்மை உட்பட 11 அமைச்சர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மற்ற 14 அமைச்சர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.

இந்தியா முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கர்நாடகா சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் ஆட்சி அமைக்க தேவையான இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.

கர்நாடாகவில் ஆட்சியமைக்க தேவையான இடங்களை விட கூடுதல் தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 114 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி 138 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இதேபோல் ஆளுங்கட்சியான பாஜக 62 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 20 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான இடங்களுக்கும் அதிகமாக காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளதால், அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கவுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே அமைச்சர்களாக இருந்த 14 பேர் படுதோல்வியை சந்தித்துள்ளனர்.

கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை உட்பட ஒரு டஜன் கேபினட் அமைச்சர்கள் வெற்றி பெற்றனர். 14 அமைச்சர்கள் கர்நாடகாவில் தோல்வியைச் சந்தித்துள்ளனர். முதல்வர் பசவராஜ் பொம்மை 35000 வாக்குகள் வித்தியாசத்திலும் 54.95 சதவீத வாக்குகள் வித்தியாசத்திலும் சிகாகான் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

இதையும் படிங்க..12 ஹெலிகாப்டரில் தமிழகத்துக்கு வரும் கர்நாடக காங்கிரஸ் வெற்றி MLAக்கள் - மீண்டும் கூவத்தூர் பார்முலா

தீர்த்தஹள்ளியில் இருந்து அரகா ஞானேந்திரா, கடக்கில் இருந்து சிசி பாட்டீல், ஒவ்ராட்டில் இருந்து பிரபு சவுகான், யஷ்வந்த்பூரில் இருந்து எஸ்டி சோமசேகர், கேஆர் புரத்தில் இருந்து பைரதி பசவராஜ், மகாலட்சுமி லேஅவுட்டில் கோபாலையா, நிப்பானியில் இருந்து சசிகலா ஜோல்லே, சுனில் குமார் ஆகியோர் அந்தந்த இடங்களில் வெற்றி பெற்ற அமைச்சர்களில் அடங்குவர்.

இதற்கிடையில், வீடமைப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு அமைச்சர் வி சோமன்னா வருணா மற்றும் சாமராஜநகர் ஆகிய இரு தொகுதிகளிலும் தோல்வியடைந்தார். கோவிந்த கார்ஜோள், பி.ஸ்ரீ.ராமுலு, முருகேஷ் நிராணி, வி.சோமண்ணா, டாக்டர் சுதாகர், ஹாலப்பா ஆச்சார், ஆர்.அசோக், எம்.டி.பி.நாகராஜ், கே.சி.நாராயண கவுடா, பி.சி.பாட்டீல், ஜே.சி.மாதுசாமி, சபாநாயகர் விஸ்வேஸ்வர் ஹெக்டே காகேரி, பி.சி.நாகேஷ், சங்கர் மூனனேகுப்பா ஆகியோர் தோல்வி அடைந்தவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி கர்நாடக சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்துள்ளார். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் தொங்கு சட்டசபை அமையும் என்றும், காங்கிரஸ் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும் கணித்தது. ஒரு சில கருத்துக்கணிப்புக்களும் பாஜக வெற்றி பெரும் என்று கூறியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க..1 மணி நேர ஆடியோ இருக்கு.. பிடிஆர் பாவம்! இன்னொரு வழக்கு போடுங்க பார்க்கலாம் - அண்ணாமலை சவால்

click me!