அயோத்தி ராமர் கோவில் மீது இஸ்லாம் கொடியை சித்தரித்து பேஸ்புக் பதிவு.. கர்நாடக நபர் கைது..

Published : Jan 22, 2024, 12:34 PM IST
அயோத்தி ராமர் கோவில் மீது இஸ்லாம் கொடியை சித்தரித்து பேஸ்புக் பதிவு.. கர்நாடக நபர் கைது..

சுருக்கம்

அயோத்தி ராமர் கோவில் மீது இஸ்லாம் கொடி படத்தை வைத்து சித்தரித்து பேஸ்புக்கில் பதிவிட்ட நபர் கைது செய்யப்பட்டார்.

கர்நாடக மாநிலம் கடக் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சமூக வலைதளங்களில் போலியான படத்தை உருவாக்கி பகிர்ந்ததற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அயோத்தி ராமர் கோயில் மீது இஸ்லாமியக் கொடிகள் பறப்பது போன்ற ஒரு புகைப்படத்தை சித்தரித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இது ராமர் கோயிலின் திறப்பு விழாவை கொண்டாடும் லட்சக்கணக்கான இந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக இந்து அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் தாஜுதீன் தஃபேதார் என்ற நபர் கஜேந்திரகர் போலிசாரால் கைது செய்யப்பட்டார்.

 

அயோத்தி ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை விழா: 84 நொடிகள் மட்டுமே நீடிக்கும் மங்கள நேரம்..

சமூக வலைதலங்களில் வைரலான இந்த புகைப்படத்திற்கு இந்துக்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், இந்து அமைப்புகளின் புகாரின் பேரில் அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுத்தனர். மேலும் அவர் பதிவிட்ட புகைப்படத்தையும் காவல்துறை நீக்கியது. இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று பொதுமக்களுக்கு உறுதியளித்த காவல் துறை, பொய்யான தகவல்களை பரப்பி மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் செயல்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளது.

அயோத்தி ராமர் கோயில் விண்வெளியில் இருந்து எப்படித் தெரிகிறது தெரியுமா? இஸ்ரோ வெளியிட்ட படம்!

உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவைக் கொண்டாடும் நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 500 ஆண்டுகால போராட்டத்தை நிறைவு செய்யும் முக்கியமான நிகழ்வான இதில் அயோத்தி கோயில் கருவறையில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது..

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தவித்த கர்ப்பிணி பெண்.! கதறிய சிறுமி.! கொதித்தெழுந்த உறவினர்கள்...! டெல்லி ஏர்போர்ட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
ராஷ்ட்ரபதிபவன் விருந்தில் லெக் பீஸ் எங்கே.! கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.!